செல்வம் அடைக்கலநாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan; பிறப்பு: சூன் 10, 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் முன்னாள் போராளியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும் ஆவார்.

விரைவான உண்மைகள் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

வடக்கு இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த அடைக்கலநாதன், தனது 15வது அகவையில் டெலோ இயக்கப் போராளியாக இணைந்தார்.[2] டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 மே 5 இல் கொல்லப்பட்டதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் அவ்வியக்கத்தின் தலைவரானார்.[2]

அரசியலில்

செல்வம் அடைக்கலநாதன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈதேசவிமு/ஈமபுவிமு/டெலோ/தவிகூ கூட்டு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணி வேட்பாளர்களில் மூன்றாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்றிருந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4] இவர் மீண்டும் 2000 தேர்தலில் டெலோ வேட்பாளராகப் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்றம் சென்றார்.[5]

2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.[6][7] அடைக்கலநாதன் 2001 தேர்தலில் டெலோ சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8] இவர் மீண்டும் 2004,[9] 2010,[10][11] 2015 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[12][13] இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் 2014 செப்டம்பர் 1 இல் கூடிய போது, இவர் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[14][15] அடைக்கலநாதன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16][17][18]

டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் 2023 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை ஈபிஆர்எல்எஃப், தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கின. அடைக்கலநாதன் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[19]

Remove ads

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads