சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (Democratic Tamil National Alliance, DTNA), என்பது இலங்கையில் இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி இலங்கைத் தேர்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இதன் தேர்தல் சின்னம் குத்துவிளக்கு ஆக காணப்பட்டது . ஆயினும்2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் இக்கூட்டின் சின்னமான குத்து விளக்கு சின்னம் மாற்றப்பட்டு சங்கு சின்னம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[1]
Remove ads
வரலாறு
2008 ஆம் ஆண்டில் தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் (TDNA) சனநாயக மக்கள் விடுதலை முன்னணி,[a] ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி),[b] தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து 2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டது.[2][3] இத்தேர்தலில் இக்கூட்டணி 1.30% வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தை மட்டும் (ஆர். துரைரத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றது.[4][5]
2009 இல் ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்குமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர், எனவே தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் புளொட், தவிகூ ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய அரசியல் குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்தன.[6] சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ததேகூ உறுப்புக் கட்சியான ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் பிரிவு) கட்சியின் எதிர்ப்பின் காரணமாக சுகு என்ற டி. சிறீதரன் தலைமையிலான ஈபிஆர்எல்எஃப் (பத்மநாபா பிரிவு) ததேகூ இல் சேர அனுமதிக்கப்படவில்லை.[6] தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பு அதன் பிறகு செயலற்ற நிலையில் இருந்தது.
2022 திசம்பரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அங்கமான இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2023 இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தது..[7][8] இதற்குப் பதிலடியாக, தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் எஞ்சியிருந்த இரண்டு உறுப்பினர்களான புளொட், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய கட்சிகள் 2023 சனவரி உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக "சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி" என்ற புதிய கூட்டணியைத் தொடங்கின.[7][9] இந்தக் கூட்டணியில் ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ்), தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இணைந்தன.[10][11][12]
2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சங்குச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு மொத்தம் 65,382 (0.59%) வாக்குகளைப் பெற்றது. வன்னியில் போட்டியிட்ட டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மட்டுமே நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[13]
Remove ads
கூட்டணிக் கட்சிகள்
நடப்பு
தேர்தல் முடிவுகள்
மாகாணசபை
குறிப்புகள்
- சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்பது புளொட்டின் அரசியல் பிரிவாகும்.
- The ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப், பத்மநாபா அணி) முன்னர் ஈபிஆர்எல்எஃப் (வரதர் அணி) ஆக இருந்தது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads