செவந்த் சானல் கம்யூனிகேசன்ஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செவந்த் சேனல் கம்யூனிகேசன்ஸ் (Seventh Channel Communications) என்பது 1985 இல் துவக்கப்பட்ட ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது 1990களில் பல தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியது. இது மணிக்கம் நாராயணனின் தலைமையில் உள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

வரலாறு

செவந்த் சேனல் கம்யூனிகேசன்ஸ் 1985 ஆம் ஆண்டில் மாணிக்கம் நாராயணனால் நிறுவப்பட்டது. ஒளிப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவக்கிய பிறகு, மணிக்கம் தூர்தர்சனுக்காக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் துவங்கினார். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 1990களில் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கான முதன்மை தயாரிப்பு நிறுவனமாக மாறியது. நிறுவனம் அதன் செயல்பாட்டின் உச்சத்தினல் இருந்தபோது சிவகுமார், ரோஜா , எஸ். பி. பாலசுப்பிரமணியம் உட்பட பல திரைப்பட நடிகர்களை தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்ற வைத்தது.[3][4] இந்த நிறுவனம் உணவக வணிகம், நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல், பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள், தமிழ்நாடு திரைப்பட விழா ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது.[5][6][7][8]

2005 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் நடித்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு (2006) படத்தை ரோஜா கம்பைன்ஸ் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கத் துவக்கி நின்றுபோன படத்தின் தயாரிப்பை செவந்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் ஏற்றது.[9]

அறிமுக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி புதுமுகங்கள் சஞ்சய், ஏக்தா கோஸ்லா, லிஸ்னா, பூஜா ஆகியோர் நடித்த முன்தினம் பார்த்தேனே (2010), பார்த்திபன் மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்த வித்தகன் (2011) ஆகிய படங்களைத் தயாரித்தது. 2010 களின் முற்பகுதியில், செவந்த் சேனல் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து மகாபாரதம் (2013) தொடரை தமிழில் மொழிமாற்றம் செய்தது.[10]

Remove ads

திரைப்படவியல்

திரைப்படத் தயாரிப்பாளராக
மேலதிகத் தகவல்கள் தலைப்பு, ஆண்டு ...
தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக
  • எத்தனை மனிதர்கள்
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  • கனவுகள் இலவசம்
  • அலை ஓசை
  • வாழ்க்கை
  • மறக்கமுடியவில்லை
  • பெண்மணம்
  • மறுபடியும் அவள்
  • உறவுகள் ஒரு தொடர்கதை
  • மறுபக்கம்
  • மதுமிதா
  • பாண்டியன் பரிசு
  • நதி எங்கே போகிறது
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads