கேள்விக் குறைபாடு

From Wikipedia, the free encyclopedia

கேள்விக் குறைபாடு
Remove ads

கேள்விக் குறைபாடு அல்லது செவிட்டுத் தன்மை [1]என்பது பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒலியை உணரும் அல்லது புரிந்து கொள்ளும் வல்லமையை இழத்தல் ஆகும். பல வகையான உயிரியல் காரணங்களாலும் சூழல் காரணங்களாலும் ஏற்படக்கூடிய இக்குறைபாடு ஒலியை உணரும் தன்மை கொண்ட எல்லா உயிரினங்களிலும் ஏற்படலாம்.

விரைவான உண்மைகள் கேள்விக் குறைபாடு, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...

ஒலியலைகள் வீச்சு, அதிர்வெண் என்பவற்றில் வேறுபடுகின்றன. வீச்சு என்பது ஒலியலையின் உயர் அழுத்த வேறுபாடு ஆகும். அதிர்வெண் என்பது ஒரு செக்கனில் உண்டாகும் அலைகளின் எண்ணிக்கையாகும். குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட ஒலிகளையோ அல்லது குறைந்த வீச்சுக்களையுடைய ஒலிகளையோ உணர முடியாதிருத்தலும் கேள்விக் குறைபாடு ஆகும்.

கேள்விக் குறைபாடு என்பது கேட்கும் ஒரு பகுதியின் இழப்போ அல்லது கேட்கும் பகுதியின் மொத்த இழப்போ ஆகும். கேள்விக் குறைபாடு உடையோருக்குக் குறைபாடானது ஒரு காதிலோ அல்லது இரண்டு காதுகளிலுமோ ஏற்படலாம். கேட்க முடியாத நிலை தற்காலிகமாகமானதாகவோ நிரந்தரமானதாகவோ இருக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டால், தாம் பேசும் மொழியைக் கற்றுக் கொள்ள இயலாமல் போய்விடும். பெரியவர்களுக்கு வேலை சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு, கேள்விக்குறைபாடு அவர்களது தனிமைக்கு வழி வகுக்கலாம்.

Remove ads

குறைபாடுகள்

குறைபாடு என்பது ஒரு செயலைச் செய்ய முற்படும் போது ஏற்படும் தடுமாற்றம் எகா, ஒருவர் படிக்கும் போது எழுத்துகள் சரிவரத் தெரியாமல் போனால் அவருக்குப் பார்வைக் குறைபாடு இருக்கிறது[2]. அதை அவர் சரி செய்ய கண்ணாடி அணிவதன் மூலம் கண்ணில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டைச் சரி செய்யலாம். அதுபோலவே காது கேட்பதில் இருக்கும் குறைபாட்டைக் களைய, அதற்குரிய கருவிகளைப் பயன்படுத்தலாம்.

கேட்டல்

உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. ஒலியைக் கேட்கும் திறன் இவ்வுறுப்புக்கு உள்ளது. காது கேட்பது பாதிக்கப்படுவது அல்லது செவித்திறன் குறைவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பே காரணமாகும். ஆங்கிலத்தில் இதனை சென்சோநியூரல் டெப்னஸ்[3] என்று கூறுவார்கள். இப்பாதிப்பு உள்ளவர்களுக்குச் சில சத்தங்கள் மிகுந்த ஒலியுடன் கேட்கும். இரண்டு அல்லது 3 பேர் சேர்ந்து பேசும்போது, அதனைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். மேலும் அதிக சத்தம் கேட்கும் இடங்களில் இருந்தால் செவித்திறன் குறையும். கேட்பதிலும் சிரமம் ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் டெலிபோன் மணி அடித்தால் கூட அதனைக் கேட்க முடியாத நிலை ஏற்படும். ஒரு மனிதனின் இரண்டு காதுகளிலும் ஒலியைக் கேட்கும் அளவு 25dB வரம்புகளிலேயே இருந்தால் அவர் சாதாரணமாகக் கேட்கும் திறன் உள்ளவர். ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ஒரு காதுக்குள் 25 டெசிபல்கள் ஒலி கேட்க முடியவில்லை எனில் அது கேட்டால் இழப்பு எனப்படுகிறது. கேட்கும் இழப்பின் வகைகளை லேசான (mild) இழப்பு, மிதமான (moderate) இழப்பு, கடுமையான (severe) இழப்பு மற்றும் ஆழ்ந்த கடுமையான (profound) இழப்பு என வகைப்படுத்தலாம். மூன்று முக்கிய வகையினால் செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது.

ஒலி அலைகள்

பொதுவாக ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக்காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். காக்ளியா என்ற இடத்தில் அது மின்காந்த அலையாக மாறி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும்[4]. மூளையில் காதுக்கான பிரத்யேகப் பகுதியில், அந்த அலை உணரப்படும் அதனால் ஒலி உணரப்படுகிறது. இதனால் மனிதர்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

செவியுணர், செவியுணரா ஒலிகள்

மனிதனின் செவியால் 20 ஹெர்ட்ஸ் முதல் 2000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்களை உடைய ஒலி அலைகளைக் கேட்டுணர முடிகிறது. இவ்வகை அதிர்வெண்கள் செவியுணர் அதிர்வெண்கள் எனப்படும். அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ்க்குக் கீழுள்ள ஹெர்ட்ஸ்க்கு 2000 அதிகம் உள்ள ஒலியை செவியால் கேட்டுணர முடியாது இவை செவியுணரா அதிர்வெண்கள் எனப்படும்.

டெசிபல்

டெசிபல் என்பது ஒலியினை அளக்கப் பயன்படும் அலகு ஆகும். 0.000000000001 W/m2 என்பது ஒரு டெசிபல் ஆகும். டெசிபல் எண் பத்தாக அதிகரித்தால் அவ்வொலியின் அடர்த்தி பத்து மடங்காக அதிகரிக்கும். எனவே ஒலி 1 W/m2 ஆக இருக்கும் போது அதன் அடர்த்தி 120 dB ஆக மாற்றப்படும். கேட்கும் அதிகபட்ச ஒலியானது, ஒலியின் அடர்த்தி, ஒலியின் அதிர்வெண் மற்றும் ஒரு நபரின் கேட்கும் திறனைப் பொறுத்தது ஆகும்.

Remove ads

வகைகள்

கேள்வியின் குறைபட்டின் தன்மையை பொருத்து பேசும் திறன்கள் வேறுபடுகிறது. ஒரு நபர் கேட்கும் திறன் அளவை வைத்து அவர்களின் பேசும் திறன் மதிப்பிடும் செய்யபடுகிறது. இழப்பின் வகைகளை லேசான (mild) இழப்பு, மிதமான (moderate) இழப்பு, கடுமையான (severe) இழப்பு மற்றும் ஆழ்ந்த கடுமையான (profound) இழப்பு என்று வகைப்படுத்தலாம். [5]

மேலதிகத் தகவல்கள் வகைபாடுகள், செவியின் கேட்டல் திறன் அளவு(டெசிபல்) ...

வேறொரு முறையிலும் இது வகைப்படுத்தப்படுகிறது. காதுகளில் ஏற்படும் குறைபாடுகளினால் காது கேளாமல் அல்லது செவிடாகும் நிலை ஏற்படும். காதில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களில் ஏற்படும் குறைகளினால் காது கேளாமல் பழுதடைகின்றது. காது கேளாத்தன்மையில் சில வகைகள் உள்ளன. அவையாவன கடத்தல் வகை, உணர்தல் வகை, கலப்புக் கடத்தல் வகை, மற்றும் நரம்புக் கோளாறுகள் ஆகும்.[மேற்கோள் தேவை]

  1. கடத்தல் வகை: வெளி அல்லது நடுச்செவியில் கோளாறு ஏற்படுமானால், இத்தன்மை உண்டாகிறது. கடத்தல் காது கேளாத்தன்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் சிறிதளவு காதுகேளாமல் அவதியுறுவர். ஆனால் இது தற்காலிகமானது; ஏனெனில் மருத்துவப் பராமரிப்பு இதனை மாற்ற உதவி செய்யும்.
  2. உணர்தல் வகை:காக்லியாவில் அமைந்துள்ள சிறிய மயிரிழை செல்கள் பழுதடைவதால் அல்லது அழிக்கப்படுவதால் இக்குறைபாடு ஏற்படுகின்றது. இக்குறைபாட்டின் அளவினைப் பொறுத்து, ஒருவர் பல சத்தங்களைக் கேட்கும் நிலையிலோ (அவை குழம்பிய நிலையில் இருந்தாலும்) அல்லது சில சத்தங்களை மட்டுமோ அல்லது எந்தச் சத்தங்களையும் கேட்காத நிலையிலோ இருக்கலாம். உணர்தல் வகை காது கேளாத்தன்மை அநேகமாக நிரந்தரமானது. பொதுவாகப் பேசும் தன்மையும் இதனால் பாதிக்கப்படும்.
  3. கலப்புக் கடத்தல் வகை:
  4. நரம்புக் கோளாறுகள்:
Remove ads

காரணங்கள்

காது கேட்கும் திறன் இழப்பு என்பது இருவகையில் ஏற்படுகிறது [6]

  1. பிறவியில் ஏற்படும் காரணங்கள் (குழந்தை பிறப்புக்கு முன் அல்லது பிறப்புக்கு பின்)
  2. பிற நிகழ்வுகளின் மூலமாகவும்

பிறவியிலேயே ஏற்படும் காரணங்கள்.

பிறந்தபின்னர் ஏற்படும் காரணங்கள்

Remove ads

பாதிப்புகள்

கேள்விகுறைபாடுயால் ஏற்படும் தனிமை ஒரு மனிதனுக்கு காது கேட்கும் இழப்பு என்பது அந்த மனிதனை ஒரு பெரிய உடல் ஊனமுற்றவராய் இருக்க செய்கிறது, ஏனென்றால் அவரைச் சுற்றியிருக்கும் ஒலி (பேச்சு,தொடர்பு,) உணர முடியாதவராக, அதை புரிந்துகொள்ளமுடியாதவராகவும் அவரை இந்த கேள்விகுறைபாடு முடக்கி வைக்கிறது இதனால் உலகம்[7]முழுவதிலும் இருந்து அந்த குறைபாடுகள் கொண்ட தனிநபர்களை இந்த சமுதயத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. இதன் விளைவாகவே கேள்விகுறைபாடு கொண்ட மனிதர்கள் தனிமையில் [8] இருக்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

பிறரோடு உரையாட இயலாமல் போவதே காதுகேளாமையின் முக்கிய பாதிப்பாகும். குழந்தைகளால் பேச்சுமொழியை வளர்க்க முடியாது.

காது கேளாமையும் இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாகப் பாதிக்கும். எனினும் கேள்விக குறைபாடு உள்ளவர்களுக்கும் தகவல் தொடர்புக்கான வாய்ப்பைக் கொடுத்தால் அவர்களும் பிறரைப்போலச் செயலாற்ற முடியும்.

65 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் கேள்விக்குறைபாடு பாதிப்புக்குள்ளானவர்கள். இந்த வயதில் உள்ள மக்கள் அதிகமாக பாதிப்பு அடைகின்ற நாடுகளை சேர்ந்தவர்கள் தெற்காசியா, ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள வயது ஆனவர்கள் ஆகும்.[மேற்கோள் தேவை]

ஒலி மாசு தரும் ஆபத்து

இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசு இல்லாத இடமே இல்லை எனலாம். பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சத்தத்தைத் தொடர்ந்து எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால் அது காதைக் கட்டாயம் பாதிக்கும். எப்படி உட்காதில் உள்ள ‘காக்ளியா’எனும் நத்தை எலும்பில் ஒலி அதிர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்கிற நரம்பிழைகள் ஏராளமாக உள்ளன. காதுக்குள் நுழைகிற பலத்த ஒலி அலைகள், இந்த நரம்பிழைகளைச் சிதைத்துவிடுகின்றன. அப்போது இவை அசாதாரண ஒலியை உண்டாக்குகின்றன. இவற்றின் விளைவு, காதில் அதிகபடியான இரைச்சல் உண்டாகும்.

முக்கியமாகப் பலத்த சத்தத்துடன் இயங்குகிற இயந்திரங்களுக்கு நடுவில் வேலை பார்ப்பவர்கள், ராக் போன்ற அதிகமான சத்தத்தை வெளிப்படுத்தும் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், விமான நிலையத்துக்கு அருகில் குடியிருப்பவர்கள், வாக்மேனை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி வெடிச்சத்தம் கேட்பவர்கள் ஆகியோருக்கு இம்மாதிரியான நரம்புப் பிரச்சினை வந்து காதுக்குள் இரைச்சல் ஏற்படுவது உண்டு.

குழந்தைகளுக்கு பாதிப்பு

15 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளில் கேள்விக்குறைபாடு 60% தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை உயர் வருவாய் கொண்ட நாடுகளின் (49%)[9] ஒப்பீட்டளவில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் (75%) அதிகம் உள்ளன.

குழந்தைப் பருவத்தில் காதுகேட்கும் திறன் இழக்கப்படுவதற்கான தவிர்க்க முடியாத காரணங்கள் பின்வருமாறு, குடற்புழுக்கள், தட்டம்மை, ரூபெல்லா, மெனிசிடிடிஸ், சைட்டோமெலகோவைரஸ் தொற்றுகள் மற்றும் நாள்பட்ட ஓரிடிஸ் மீடியா (31%) போன்ற தொற்றுகள். அத்துடன் எடை குறைந்த பிறக்கின்ற குழந்தைகள், எடை அதிகமாக பிறக்கின்ற குழந்தைகள் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கும் குழந்தைகள் அதிகம் பாதிப்பு அடைகின்றனர்.[மேற்கோள் தேவை]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads