சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cyberjaya Utara MRT Station அல்லது Cyberjaya Utara–Finexus Station; மலாய்: Stesen MRT Cyberjaya Utara) என்பது மலேசியா, சிலாங்கூர், சைபர்ஜெயா நகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். சைபர்ஜெயா புறநகர் பகுதிக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, சனவரி 2023-இல் திறக்கப்பட்டது.
PY38 சியாரா 16 எம்ஆர்டி நிலையத்திற்கும் PY40 சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம் PY39 எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[2] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு
"எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா (SSP) வழித்தட சீரமைப்புக் காணொளி" என்ற தலைப்பில் யூடியூப் வலையொளியில் எம்ஆர்டி நிறுவனத்தால் செப்டம்பர் 15, 2016 அன்று வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் வடக்கு சைபர்ஜெயா (Cyberjaya North) என்று இந்த நிலையத்தின் பெயர் முதன்முதலில் குறிப்பிடப்பட்டது.[3]
அந்தக் காணொளியில், வடக்கு சைபர்ஜெயா எம்ஆர்டி நிலையத்திற்கான தற்காலிக நிலையக் குறியீடு S34 என்றும் அறிவிக்கப்பட்டது.[2] அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நிலையத்தின் பெயர் சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி (MRT Cyberjaya Utara) என மாற்றம் செய்யப்பட்டது.[4][5]
கட்டுமானங்கள்
சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானம் S209 (Package S209) உடன்படிக்கையின் கீழ் செயல் படுத்தப்பட்டது. S209 உடன்படிக்கை என்பது அப்போதைய கட்டுமானத்தில் இருந்த PY38 சியாரா 16 எம்ஆர்டி நிலையத்தின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளையும் உள்ளடக்கியது. நிலையங்களின் கட்டமைப்பு பணிகளுக்கான தொகை மொத்தம் RM 137.9 மில்லியன் ஏக்கர் ஓர்க்ஸ் நிறுவனத்திடம் (Acre Works Sdn Bhd) அக்டோபர் 12, 2017-இல் வழங்கப்பட்டது.[4]
Remove ads
செயல்பாடு
S209 உடன்படிக்கை, நிலையங்களின் கட்டமைப்புகள் மற்றும் அவை தொடர்பான வேலைகளை உள்ளடக்கியது. அவற்றுள் சைபர்ஜெயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள PY39 சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமான வேலைகளும் அடங்கும்.[6][4][7]
PY39 சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2023 மார்ச் 16-ஆம் திகதி திறக்கப்பட்டது. KC03 PY14 பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி PY41 புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது. இருப்பினும் இந்த நிலையம் முதலில் சூலை 2022-இல் திறக்க திட்டமிடப்பட்டது.[8] ஆனாலும் தொடருந்து பெட்டிகளின் சோதனை ஓட்டம் காரணமாக சனவரி 2023-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் நிலையத்தின் திறப்புவிழா தாமதமானது.[9][10]
Remove ads
அமைவு
சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்; சிலாங்கூர் மாவட்டங்களில் ஒன்றான சிப்பாங் மாவட்டத்தில் சைபர்ஜெயா நகரத்தில் இருந்து ஏறக்குறைய 5 கி.மீ. தொலைவில் பெர்சியாரான் எப்பேக் சாலையில் (Persiaran APEC) அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு மிக அருகில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகமான இசுகைபார்க் @ சைபர்ஜெயா (Skypark @ Cyberjaya) உள்ளது.
சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளான இசுகைபார்க் (Sky Park), சுங்கை காஜா தோட்டம் (Ladang Sungai Gajah), காசியா குடியிருப்பு (Cassia Garden Residensi), சக்கராந்தா (Jacaranda), குளோவர் (Clover) ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிலையம்[11][12] போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.
கட்டமைப்பு
ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில், PY39 சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், தற்காலிக வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[12]
மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் இந்த PY39 சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் கொண்டுள்ளது.[5]; அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற வகையில் கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்துப் பதிவுகள்; மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலைச் சேவை மையங்கள்[12] போன்றவை அடங்கும்.
பயனர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக; பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. நிலையத்தின் நுழைவாயில் மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் தங்களின் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[12]
Remove ads
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
இந்த நிலையத்தில் ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.[13]
Remove ads
பேருந்து சேவைகள்
சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்தின் ஊட்டி பேருந்து சேவை முனையம், நிலையத்தின் வடக்கு மையத்தில் (பேருந்து நிறுத்தக் குறியீடு - SP398) அமைந்துள்ளது. இந்த மையத்தில் இரண்டு ஊட்டி பேருந்து வழித்தடங்கள் உள்ளன.[14]
Remove ads
காட்சியகம்
சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
பொதுவகத்தில் சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலைய தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

