ஜார்ஜ் பெர்னாண்டஸ்

இந்திய முன்னாள் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஜார்ஜ் பெர்னாண்டஸ்
Remove ads

ஜார்ஜ் மேத்தியூ பெர்னாண்டசு[3] (George Mathew Fernandes; சூன் 3, 1930 - சனவரி 29, 2019), ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார்.[4]

விரைவான உண்மைகள் ஜார்ஜ் பெர்னாண்டசு, பாதுகாப்பு அமைச்சர் ...
Remove ads

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்

ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

  • 2009 ஆம் ஆண்டிலிருந்து பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.

அமைச்சர் பணி

  • 1977 ஆம் ஆண்டில் மார்ச் முதல் சூலை வரை இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1977 முதல் 1979 வரை இந்தியத் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1989 முதல் 1990 வரை இந்தியத் தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1990 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே வரை இந்தியக் காஷ்மீர் மாநில விவகாரங்களுக்கான அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.
  • 1998 முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
  • 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

மறைவு

ஜார்ஜ் பெர்னாண்டசு ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாகப் படுக்கையில் இருந்தார்.[5] 2019 சனவரி 29 அன்று தில்லியில் தனது 88-வது அகவையில் காலமானார்.[6][7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads