ஜி. எம். சுந்தர்
இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜி. எம். சுந்தர் (G. M. Sundar) என்பவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஏராளமான தமிழ் படங்களில்ர் நடித்துள்ளா. உருமற்றம் என்ற படத்தின் வழியாக தயாரிப்பாளராகவும் ஆனார்.
தொழில்
இவர் அடையாறு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் நடிப்பை பயின்றார். புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயக்குநர் கே. பாலச்சந்தர் இவருக்கு முதலில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.[1]
பின்னர், சுந்தர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா போன்ற படங்களில் நடித்தார்.[2]
இப்படங்களைத் தவிர, பி. லெனின் இயக்கி தேசிய விருது பெற்ற ஊருக்கு நூறு பேர் திரைப்படத்தில் சுந்தர் முக்கிய வேடத்தில் நடித்தார்.[3] சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருதை வென்ற உருமாற்றம் என்ற குறும்படத்தை தயாரித்து நடித்தார்.[4]
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்த நலன் குமரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் சுந்தர் தனது நடிப்பு வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.[3]
Remove ads
திரைப்படவியல்
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads