தக்காண முகமை

From Wikipedia, the free encyclopedia

தக்காண முகமை
Remove ads

தக்காண அரசுகளின் முகமை (Deccan States Agency), பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் பம்பாய் நகரம் ஆகும். தக்காண முகமையில் 18 சுதேச சமஸ்தானங்களும், 12 ஜமீன்தார்களும் இருந்தனர். பிரித்தானிய இந்தியாவின் தக்காண முகமை, தற்கால மகாராட்டிரா மாநிலத்தில், இந்திய விடுதலைக்கு முன்னர் இருந்த சுதேச சமஸ்தானங்களிடமிருந்து ஆண்டுதோறும் திறை வசூலித்து மும்பை மாகாணத்தின் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதுடன், சுதேச சமஸ்தானங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.[1]

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்தியப் பேரரசு பிரித்தானிய இந்தியாவிடம் வீழ்ச்சி அடைந்தது. எனவே மராத்தியப் பேரரசின் தக்காணப் பீடபூமி மற்றும் கொங்கண் மண்டலத்தில் இருந்த சிற்றரசுகள் அனைத்தும் 1818-ஆம் ஆண்டு முதல், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த துணைப்படை திட்டத்தை ஏற்று, பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் சுதேச சமஸ்தானங்களாக ஆட்சி செய்தனர். இந்த சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் தக்காண முகமை 1933-ஆம் ஆண்டில் செயல்பட்டது. முன்னர் தக்காண முகமையின் பணிகளை செய்து கொண்டிருந்த, கோலாப்பூர் முகமை, பூனா முகமை, பிஜப்பூர் முகமை, தார்வார் முகமை மற்றும் கொலபா முகமைகள் கலைக்கப்பட்டு, தக்காண முகமையில் இணைக்கப்பட்டது.

1947 இந்திய விடுதலைக்குப் பிறகு தக்காண முகமை கலைக்கப்பட்டது. இம்முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்கள் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது.[2] 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, இம்முகமையின் பெரும் பகுதிகள் பம்பாய் மாகாணம் மற்றும் சில பகுதிகள் மைசூர் இராச்சியத்தில் இணைக்கப்பட்டது.

1960-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, பம்பாய் மாகாணத்திலிருந்து மகாராட்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் நிறுவப்பட்டது.[3]

Remove ads

தக்காண முகமையின் சுதேச சமஸ்தானங்கள்

தக்காண முகமையின் கீழ் பெரிதும், சிறிதுமாக சுதேச சமஸ்தானங்கள் இருந்தது. அவைகளில் பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:[4] and jagirs (feudal 'vassal' estates) in western India.

பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்

  1. கோலாப்பூர் சமஸ்தானம், 19 குண்டு மரியாதை (பழைய கோலாப்பூர் முகமை)
  2. ஜஞ்சிரா சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  3. சாங்கிலி சமஸ்தானம், 9 குண்டு மரியாதை
  4. முதோல் சமஸ்தானம், 9 குண்டு மரியாதை
  5. சாவந்த்வாடி சமஸ்தானம், 11 குண்டு மரியாதை (பழைய கொலபா முகமை)
  6. போர் சமஸ்தானம், 9 குண்டு மரியாதை, (பழைய புனே முகமை)

பிரித்தானிய இந்தியாவின் வணக்கமில்லா சுதேச சமஸ்தானங்கள்

  1. அக்கல்கோட் சமஸ்தானம்
  2. அவுந்து சமஸ்தானம்
  3. ஜம்கண்டி சமஸ்தானம்
  4. இளைய குருந்வாட் சமஸ்தானம்
  5. மூத்த குருந்த்வாட் சமஸ்தானம்
  6. இளைய மிராஜ் சமஸ்தானம்
  7. மூத்த மிராஜ் சமஸ்தானம்
  8. நிம்சோத் சமஸ்தானம்
  9. பால்தான் சமஸ்தானம்
  10. ராம்துர்க் சமஸ்தானம்
  11. சாவனூர் சமஸ்தானம், (பழைய தார்வார் முகமை)
  12. ஜாத் சமஸ்தானம் (பழைய பிஜப்பூர் முகமை)

பழைய கோலாப்பூர் முகமையின் ஜமீன்கள்

  1. கஜேந்திரவாடா
  2. கஜேந்திரகட்
  3. நெஸ்ரி
  4. இம்மத் பகதூர்
  5. சல்கரஞ்சி
  6. இளைய ககல்
  7. மூத்த ககல்
  8. கப்சி
  9. லத்தூர்
  10. சார் லஷ்கர் கர்தேக்கர்
  11. தோர்கல்
  12. விசால்கட்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads