தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
இலங்கையின் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (Tamil People's National Alliance) என்பது இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணிக் கட்சியாகும். இக்கட்சி 2020 பெப்ரவரியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சில தமிழ்த் தேசியக் கட்சிகளால் உருவாக்கப்பட்டது. இக்கூட்டணி இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் மீன் சின்னத்தைக் கொண்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.[1]
Remove ads
வரலாறு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (த.தே.கூ) இருந்து வெளியேறிய நான்கு வெவ்வேறு கட்சி உறுப்பினர்கள் சிலர் 2020 பெப்ரவரி 9 இல் யாழ்ப்பாணத்தில் கூடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இதன்படி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர்.[2][3] இவ்வொப்பந்தத்தில் பின்வரும் நான்கு கட்சிகள் கையெழுத்திட்டன:[2][4][5]
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்)
- முன்னாள் வட மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கட்சி
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம. க. சிவாஜிலிங்கம், ந. சிறீகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி
- முன்னாள் வட மாகாண முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி
2001 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கில் இருந்து வரும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்குவதே தமது முக்கிய நோக்கம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கைகளில் இருந்து விலகி விட்டதாகவும், வட-கிழக்குத் தமிழரின் தேவைகளை அது கவனிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.[2][3]
சி. வி. விக்னேசுவரன் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சியின் தலைவர் ஆகவும், சிவசக்தி ஆனந்தன் செயலாளராகவும் உள்ளனர்.[6][7] விக்னேசுவரன் தலைமையில் இக்கூட்டணியின் செயற்குழுவில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆறு பேரும், ஈபிஆர்எல்எஃப் இருவர், தமிழ்த் தேசியக் கட்சியின் இருவர், ஈழத் தமிழர் சுயாட்சிக் கட்சியின் ஒருவர் உட்பட 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[6]
Remove ads
தேர்தல் வரலாறு
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொண்டது. கட்சியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் 21,554 விருப்பு வாக்குகள் பெற்று முதல் தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.
2020 நாடாளுமன்றத் தேர்தல்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதற் தடவையாக 5 ஆகத்து 2020 தேர்தலில் போட்டியிட்டது. க. வி. விக்னேஸ்வரன் தலைமையில் 0.44% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 1 இடத்தைக் கைப்பற்றியது.
தேர்தல் மாவட்டங்கள் வாரியாக த.ம.தே.கூ வென்ற வாக்குகளும், இடங்களும்:
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads