தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 5,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1996 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
மேலதிகத் தகவல்கள் வ.எண், தலைப்பு ...
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. அருள் நிறை மரியம்மை காவியம் (முதல் பரிசு), 2. தாய்ப்பால் (இரண்டாம் பரிசு) 3. பாண்டியன் பாவை (மூன்றாம் பரிசு) | 1. துரை. மாலிறையன் 2. பண்ணன் 3. இரா. சோதிவாணன் | 1. மரியம்மை பதிப்பகம், புதுச்சேரி. 2. பண்ணன் (சொந்தப் பதிப்பு), சென்னை. 3. சோராதே பதிப்பு, சோளிங்கபுரம், வேலூர் மாவட்டம். |
2 | புதினம் | 1. ஒன்பது ரூபாய் நோட்டு (முதல் பரிசு) 2. சில பாதைகள்... சில பயணங்கள்... (இரண்டாம் பரிசு) 3. களரி (மூன்றாம் பரிசு) | 1. தங்கர்பச்சான் 2. மு. சுப்புலட்சுமி, க. நடராசன் 3. ப. ஜீவகாருண்யன் | 1. செம்புலம், சென்னை. 2. பனை பதிப்பகம், மதுரை. 3. மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. சொற்பொருட் கோட்பாடுகள் (முதல் பரிசு) 2. புதிய தமிழ் (இரண்டாம் பரிசு) | 1. முனைவர் ந. கடிகாசலம் 2. முனைவர் சொ. பரமசிவம் | 1. பகவதி பதிப்பகம், சென்னை. 3.பட்டுப் பதிப்பகம், சென்னை. |
4 | தமிழ், தமிழ்ப் பண்பாடு தொடர்பாக பிற மொழிகளில் வெளியிடப்பட்ட நூல்கள் | 1. வராங்கன் கதை (முதல் பரிசு) 2. Indian Palaeography (இரண்டாம் பரிசு) 3. Paripatal (மூன்றாம் பரிசு) | 1. மூ. பரிமணன் 2. சு. இரத்தினசாமி 3. பேராசிரியர் கே.ஜி. சேஷாத்திரி | 1. ஆசியவியல் நிறுவனம், சென்னை. 2. சக்தி புத்தக நிலையம், மதுரை. 3. ஆசியவியல் நிறுவனம், சென்னை. |
5 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. உலகத் தோற்றமும் தமிழர் பண்பாடும் (முதல் பரிசு) 2. தமிழகக் கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள் - தீர்வுகள் (இரண்டாம் பரிசு) 3. சடங்குப் பாடல்கள் (மூன்றாம் பரிசு) | 1. பேராசிரியர் க. நெடுஞ்செழியன் 2. எஸ்.சியாமளா ஸ்வாமிநாதன் (ஷ்யாமா) 3. முனைவர் கே. ஏ. ஜோதிராணி | 1. மனிதம் பதிப்பகம், சென்னை. 2. மணிமேகலைப் பதிப்பகம், சென்னை. 3. பல்கலை வெளியீடு, சென்னை. |
6 | பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை | 1.பங்குச்சந்தை (முதல் பரிசு) 2. உறவு காக்கும் வணிகம் (இரண்டாம் பரிசு) 3. தொழில் முனைவு மேம்பாடு (மூன்றாம் பரிசு) | 1. வ. பா. சீனிவாசன் 2. முனைவர் நல்லி குப்புசாமி செட்டியார் 3. முனைவர் வி. பாலு | 1. ஃபீனிக்ஸ் பதிப்பகம், சென்னை. 2. பிரெய்ன் பாங்கு, சென்னை. 3. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பப்ளிகேசன்ஸ், சென்னை. |
7 | கணிதவியல், வானவியல் | 1. சோதிடவியல் (முதல் பரிசு) | 1. முனைவர் தி. மகாலட்சுமி | 1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
8 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. டிரான்சிஸ்டர் மற்றும் ஐசி ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் (முதல் பரிசு) 2. மோட்டார் ரீவைண்டிங் (இரண்டாம் பரிசு) 3. ஊசி வேலையும் உடை தயாரித்தலும் - 3 (மூன்றாம் பரிசு) | 1. மு. விஜயகுமார் 2. சீ. வாசன் (சி. சுந்தரசீனிவாசன்) 3. ஆர். வெற்றிச்செல்வி (ஜெயலட்சுமி) | 1. & 2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 3. பாரி நிலையம், சென்னை. |
9 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. மாசற்ற சுற்றுச்சூழலும் மனித மேம்பாடும் (முதல் பரிசு) 2. ஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரம் (இரண்டாம் பரிசு) 3. பாலியல் கல்வியும் போதை மருந்து விழிப்புணர்வும் (மூன்றாம் பரிசு) | 1. அருள்நம்பி 2. முனைவர் அ. சிதம்பரம் 3. டாக்டர் பி. கி. சிவராமன் | 1. சுவாதி பதிப்பகம், சென்னை. 2. எஜூகேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபிஸிகல் கல்ச்சர், சென்னை. 3. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. |
10 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும் (முதல் பரிசு) 2. இசுலாமும் சமய நல்லிணக்கமும் (இரண்டாம் பரிசு) 3. வாழும் நெறி (மூன்றாம் பரிசு) | 1. பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை 2. மணவை முஸ்தபா 3. முனைவர் ஆர். ஏ. சுப்பிரமணியன் | 1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2. மணவை பப்ளிகேசன்ஸ், சென்னை. 3. ஸ்ரீ செந்தில் பதிப்பகம், சென்னை. |
11 | சிறுகதை | 1. வம்ச விருத்தி (முதல் பரிசு) 2. வனத்தில் ஒரு மான் (இரண்டாம் பரிசு) 3. விடியும் நேரம் (மூன்றாம் பரிசு) | 1. அ. முத்துலிங்கம் 2. வித்யா சுப்பிரமணியம் 3. விஜயா வரதன் | 1. மித்ர வெளியீடு, சென்னை. 2. அறிவு நிலையம் பதிப்பகம், சென்னை 3. கார்த்திக் பதிப்பகம், சென்னை. |
12 | நாடகம் | 1. நீர் மாங்கனி (முதல் பரிசு) 2. பீஷ்மர் (இரண்டாம் பரிசு) 3. மானம் காத்த மாவீரன் (மூன்றாம் பரிசு) | 1. முனைவர் நா. இராசகோபாலன் (மலையமான்) 2. கவிஞர் கு. ம. கிருஷ்ணன் 3. பொன். பரமகுரு | 1. அன்பு பதிப்பகம், சென்னை. 2. சேகர் பதிப்பகம், சென்னை 3. மணிமேகலை பதிப்பகம், சென்னை. |
13 | கவின் கலைகள் | 1. ஓவியக் கோடுகள் (முதல் பரிசு) | 1. கோ. திருஞானம் | 1. மாணவர் புத்தகப் பண்ணை, சென்னை. |
14 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. மகாகவி பாரதி வரலாறு (முதல் பரிசு) 2. அருட்செல்வர் (இரண்டாம் பரிசு) 3. வரலாறு கண்ட வைக்கம் வீரர் (மூன்றாம் பரிசு) | 1. சீனி. விசுவநாதன் 2. பேராசிரியர் சு. குழந்தைநாதன் 3. புலவர் க. அரசுமணி | 1. சீனி. விசுவநாதன் (சொந்தப் பதிப்பு), சென்னை. 2. அன்னம் (பி) லிமிடெட், சிவகங்கை. 3. உமா பதிப்பகம், சென்னை. |
15 | தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் | 1. மரம் இல்லா வாழ்க்கை மரண வாழ்க்கை (முதல் பரிசு) | 1. நா. இராசேந்திரன் (வலசை வீரபாண்டியன்) | 1. வள்ளி பதிப்பகம், செய்யாறு. |
16 | இயற்பியல், வேதியியல் | 1. விண்வெளியில் வீர காவியங்கள் (முதல் பரிசு) 2. விண்வெளிப் பயணம் (இரண்டாம் பரிசு) | 1. டாக்டர் க. இந்திரகுமார் 2. முனைவர் ந. சுப்பு ரெட்டியார் | 1. மணிமேகலை பதிப்பகம், சென்னை. 2. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. |
17 | கல்வி, உளவியல் | 1. எண்ணம் வெற்றியின் சின்னம் (முதல் பரிசு) | 1. மெர்வின் | 1. குமரன் பதிப்பகம், சென்னை. |
18 | வரலாறு, தொல்பொருளியல் | 1. தமிழ்நாடு சட்டமன்ற மேலவை (முதல் பரிசு) 2. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போர் முறைகள் (இரண்டாம் பரிசு) 3. வயிரவன் கோயில் (மூன்றாம் பரிசு) | 1. ந. முடிகோபதி 2. நா. ரா. பண்டரிநாதன் 3. மா. சந்திரமூர்த்தி | 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. மணிமேகலை பதிப்பகம், சென்னை. 3. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |
19 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | ----- | ----- | ----- |
20 | சிறப்பு வெளியீடுகள் | 1. மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் (முதல் பரிசு) 2. தடிவீர சுவாமி கதை மற்றும் வன்னிராயன் கதை (இரண்டாம் பரிசு) 3. பேரறிவுக் களஞ்சியம் பட்டினத்தார் பாடல் விருத்தியுரை (இரு பாகங்கள்) (மூன்றாம் பரிசு) | 1. மணவை முஸ்தபா 2. முனைவர். சூ. நிர்மலாதேவி 3. கோக்கலை ஜேராஜன் | 1. மணவை பப்ளிகேசன்ஸ், சென்னை 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 3. மகாராணி, சென்னை. |
21 | குழந்தை இலக்கியம் | 1. வல்லவனுக்கு வல்லவன் (முதல் பரிசு) 2. பொது அறிவுப் புதிர்கள் பாகம் 1 (இரண்டாம் பரிசு) 3. டாக்டர் பூவண்ணனின் சிறுவர் இலக்கியக் கலைக்களஞ்சியம், தொகுதி 3 (மூன்றாம் பரிசு) | 1. வே. சபாநாயகம் 2. மு. அப்பாஸ் மந்திரி 3. வத்சலா பூவண்ணன் | 1. மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. 2. மணிமேகலை பதிப்பகம், சென்னை. 3. பூவண்ணன் பதிப்பகம், கோயம்புத்தூர். |
22 | திறனாய்வு நூல்கள் | 1. இந்திய நாடகம் ஒரு கூர்ந்த கண்ணோட்டம் (முதல் பரிசு) 2. திறனாய்வுக்கலை (இரண்டாம் பரிசு) 3. வேரும் விழுதும் (மூன்றாம் பரிசு) | 1. மு. சேரன் 2. முனைவர் தி. சு. நடராசன் 3.டாக்டர் ஆர். மரிய செல்வம் | 1. சேரன் பதிப்பகம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 3. தென்பொதிகைத் தமிழ்ச் சங்கம், எட்டயபுரம். |
23 | அனைத்துத் தலைப்புகளின் கீழான மொழிபெயர்ப்பு நூல்கள் | 1. மருத்துவக் கலைச்சொற்கள் (முதல் பரிசு) 2. நம் உலகம், நமது உடல் நலம் (இரண்டாம் பரிசு) 3. புதைந்த காற்று (மூன்றாம் பரிசு) | 1. டாக்டர் சாமி. சண்முகம் 2. முனைவர் சொ. பழனிச்சாமி 3. பாவண்ணன் | 1. பூங்கா பதிப்பகம், சென்னை 2. பழனி பாராமவுண்ட் பதிப்பகம், பழனி. 3. விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். |
மூடு
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads