தங்கர் பச்சான்
இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், ஒளிப்பதிவாளர், புதின எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கர் பச்சான் (Thangar Bachan) தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார். தேசிய திரைப்பட விருதுகளில் நடுவர் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[1]
Remove ads
துவக்க வாழ்க்கை
தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர்.[2]
தொழில்
திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவர்.
தங்கர்பச்சன் முதல் படமான மலைச் சாரல் மூலம் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் மோகமுள், பாரதி போன்ற படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டார். இவர் இயக்குநராக அழகி படத்தின் வழியாக அறிமுகமானார்.
திரைப்படங்கள் தவிர இலக்கியப் பணிகளிலும் அவ்வப்போது இவர் பங்களித்துள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் அம்மாவின் கைப்பேசி ஆகியவை இவரது புதினங்களாகும். இறுதியில் இந்தப் புதினங்களை இவரை திரைப்படங்களாக இயக்கினார்.
தமிழ்த் திரைப்படங்களில் சரியாக சித்தரிக்கப்படாத வட தமிழக கிராமங்களை சித்தரித்த பங்களிப்பிற்காக தங்கர் பச்சன் அறியப்பட்டவர். இவரது கதைக்களம் பெரும்பாலும் பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பாரதிராஜாவுக்குப் பிறகு தங்கர் பச்சான் படங்களில் கிராமங்கள் சிறப்பாகக் காட்டப்பட்டன. பாரதிராஜாவே தனக்குப் பிறகு பச்சன் சிறந்த கிராமியப் படங்களை இயக்குகிறார் என்று தெரிவித்தார்ர்.[3]
Remove ads
அரசியல்
2024 இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பாக கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 249,809 வாக்கு வித்தியாசத்தில் எம். கே. விஷ்ணு பிரசாதிடம் தோல்வியடைந்தார்.[4][5] பின்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த வந்தார் அப்பொழுது சற்று ஆவேசமாக தோல்வியை குறித்து பேசினார்.[6]
திரைப்பட வரலாறு
இயக்குநராக
ஒளிப்பதிவு இயக்குநராக
- மலைச் சாரல் (1990)
- தர்ம சீலன் (1991)
- மதுமதி (1992)
- மோகமுள் (1993)
- ராசாதி ராச ராச மார்த்தான்ட ராச குலோத்துன்க.... (1993)
- வீட்டை பார் நாட்டை பார் (1994)
- மலப்புரம் ஹாஜி மகானாயா சோஜி (1994) (மலையாளத் திரைப்படம்)
- வான்மதி (1995)
- வாழ்க ஜனநாயகம் (1995)
- காதல் கோட்டை (1996)
- காலமெல்லாம் காதல் வாழ்க (1997)
- கருவேலம்பூக்கள் (1997)
- காதலே நிம்மதி (1998)
- சிர்ப் தும் (1998) (இந்தித் திரைப்படம்)
- மறுமலர்ச்சி (1998)
- கண்ணெதிரே தோன்றினாள் (1999)
- கனவே கலையாதே (1999)
- கள்ளழகர் (1999)
- உன்னுடன் (1999)
- பாரதி (2000)
- கண்ணுக்கு கண்ணாக (2000)
- குட்டி - 2001
- பாண்டவர் பூமி (2001)
- மஜ்னு (2001)
- பெரியார் (2007)
- இவைகள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
நடிகராக
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி (2005) இளங்கோவனாக
- பள்ளிக்கூடம் (2007) குமாரசாமியாக
- அம்மாவின் கைப்பேசி (2012) பிரசாத்தாக
- மெர்லின் (2018)
- கருமேகங்கள் கலைகின்றன (2023) அரசு வழக்கறிஞராக (கௌரவத் தோற்றம்)
Remove ads
எழுத்தாளராக
தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன.
புதினங்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
கட்டுரை
- சொல்லத்தோணுது - 2015
Remove ads
விருதுகள்
- 1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது (வெள்ளை மாடு)
- 1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - திருப்பூர் தமிழ் சங்கம் இலக்கிய விருது (வெள்ளை மாடு)
- 1996 - சிறந்த நாவல் - தமிழ் நாடு அரசு விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)[9]
- 1996 - சிறந்த நாவல் - அக்னி அஷர விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
- 1996 - சிறந்த நாவல் - திருப்பூர் தமிழ் சங்கம் விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
- 1997 - சிறந்த ஒளிப்பதிவாளர் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது (திரைப்படம் - காலமெல்லாம் காதல் வாழ்க)
- 1998 - "கலைமாமணி" விருது - தமிழ் சினிமாவில் பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது[10]
- 2002 - சிறந்த இயக்குநர் SICA விருது - (திரைப்படம் - அழகி )
- 2005 - சிறந்த நடிகர் ஜெயா தொலைக்காட்சி விருது (திரைப்படம் – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
- 2007 - திரைப்பட இயக்குநர் பங்களிப்பிற்காக தமிழ் நாடு மாநில ராஜா சான்டோ விருது.[11]
- 2007 - சிறந்த இயக்குநர் சாந்தோம் விருது. (திரைப்படம் - ஒன்பது ரூபாய் நோட்டு)[12]
- 2007 - சிறந்த தமிழ் இயக்குநர் சத்யன் நினைவுத் திரைப்பட விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)[13]
- 2007 - சிறந்த கதை வசனங்களுக்கான SICA விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)
- 2007 - சிறந்த இயக்குநர் விருது (பள்ளிக்கூடம்) – தமிழ்நாடு அரசு
- 2015 - சிறந்த நூல் - தினத்தந்தி ஆதித்தனார் இலக்கிய விருது (தங்கர் பச்சான் கதைகள்)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads