தமிழ் விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவின் தமிழ் மொழிப் பதிப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia, சுருக்கமாக தமிழ் விக்கி) என்பது விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழிப் பதிப்பு ஆகும்.[1] செப்டம்பர் 2003-இல் இது தொடங்கப்பட்டது. 3 ஆகத்து 2025 அன்று, ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 59-ஆம் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[2] 1,75,584 கட்டுரைகள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 2,45,367 பேர் ஆவர்.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில் முதல் இடத்திலும், தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா வகுத்துள்ள 'கட்டுரை ஆழம்' எனும் அளவுகோலின்படி, 26 நவம்பர் 2023 அன்று 64- ஆவது இடத்தில் இருந்தது.[3]
Remove ads
வளர்ச்சி
- 2009 - நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[4].
- 2017 - மே மாதம் 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.[5]
- 2019 - நவம்பர் மாதக் கணக்கின்படி, 59-ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா இருந்தது. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.
- 2022 - திராவிட மொழிகளில் முதன்முதலில் 150,000 கட்டுரைகளைக் கடந்த விக்கிப்பீடியா ஆகும்.
Remove ads
தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads