2022
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2022 ஆம் ஆண்டு (MMXXII) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின்படி சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2022-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 22-ஆவது ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 22-ஆவது ஆண்டுமாகும். அத்துடன் இது 2020களின் மூன்றாவது ஆண்டுமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை 2022-ஐ பன்னாட்டு மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு ஆண்டாகவும்,[1] நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல் பன்னாட்டு ஆண்டாகவும்,[2] நிலையான மலை வளர்ச்சிக்கான பன்னாட்டு ஆண்டாகவும்,[3] மற்றும் கண்ணாடியின் பன்னாட்டு ஆண்டாகவும் அறிவித்துள்ளது.[4]
கோவிட்-19 பெருந்தொற்று மூன்றாவது ஆண்டில் நுழையும் இத்தருவாயில், இந்த பெருந்தொற்று குறைய வேண்டும் அல்லது குறிப்பிட்ட பகுதியில் காணும் நோயாக மாறவேண்டும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 7 – கோவிட்-19 பெருந்தொற்று: உலகம் முழுவதும் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 மில்லியனை கடந்தது.[5]
- சனவரி 10 – அமெரிக்காவில் முதன்முதலாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் வெற்றிகரமாக மனிதனுக்குப் பொருத்தப்பட்டது.[6][7]
- சனவரி 15 - பாலினேசியாவைச் சேர்ந்த டோங்கா தீவு நாட்டிற்கு அருகில் பசிபிக் பெருங்கடலுக்கடியில்உங்கா தொங்கா எரிமலை வெடித்து ஆழிப்பேரலையும் ஏற்பட்டது.
- சனவரி 20 - பெல்சிய-பிரித்தானிய விமானி சாரா ரூதர்போர்டு தனியாக 19 வயதில் உலகைச் சுற்றிய இளம் பெண் என்ற உலக சாதனையை ஏற்படுத்தினார்.18 ஆகஸ்டு 2021 அன்று தொடங்கிய இவரது விமானப் பயணம் 20 சனவரி 2022 அன்று முடிவுற்றது. இவர் 32,000 மைல்கள், 60க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள், 52 நாடுகள், 5 கண்டங்கள் என விமானத்தில் சுற்றியவர்.[8]
- சனவரி 24 - புர்க்கினா பாசோவில் நடத்தப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் ரோக் மார்க் கபோரே பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[9]
- பிப்ரவரி 3 - இசுலாமிய அரசின் இரண்டாம் கலிபா அபு இப்ராகிம் அல்-ஹாசிமி அல்-குராசி அமெரிக்காவின் அதிரடிப்படைகளால் கொல்லப்பட்டார்.
- கோவிட்-19 பெருந்தொற்று: ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை அடுத்து இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றால் இறப்பு எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது.[10]
- பிப்ரவரி 4 - பிப்ரவரி 20 - சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது.[11]
- பிப்ரவரி 13 - ஜெர்மன் நாட்டின் அதிபராக பிராங் வால்டர் சென்மர் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]
- பெப்ரவரி 24 - உக்ரைன் மீது உருசியா போர் தொடுத்தது.
- மார்ச் 9 - தென் கொரியாவின் புதிய அரசுத்தலைவராக யூன் சுக்-இயோல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மார்ச் 11 - சிலி நாட்டின் அதிபராக கேப்ரியல் போரிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]
- மார்ச் 23 - சீனாவின் கிழக்கத்திய வான்வழி விமானம் 5735 குவாங்ஷி பகுதியின் தெற்கு மலைப்பகுதியில் வீழ்ந்ததில்[14], அதில பயணம் செய்த 132 பேரும் மாண்டனர்.[15]
- ஏப்ரல் 24 - இம்மானுவேல் மாக்ரோன், பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தலில், இரண்டாம் முறையாக வென்றார்.[16][17][18][19]
- மே 9 - இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு மகிந்த ராசபக்ச, இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பினார்.[20][21][22]
- மே 12 - ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்பு
- மே 14 - முகமது பின் சயீது அல் நகியான் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[23]
- சூன் 22 - ஆப்கானித்தான் நிலநடுகக்த்தில் குறைந்தது 1000 பேர் பலியானதாகவும் 1500 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.[24] இந்தியாவின் சில பகுதிகள், பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து, கிழக்கு பஞ்சாப் மாகாணம் மற்றும் ஈரான்[25][26]
- சூன் 23 - அசாம் வெள்ளத்தால் 108 மக்கள் கொல்லப்பட்டனர். 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.[27]
- சூலை 17 - இந்தியாவில் 200 கோடிக்கும் மேலான கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.[28]
- சூலை 25 - திரௌபதி முர்மு இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
- சூலை 28 - 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு இந்தியாவின் சென்னை மாநகரத்தில் துவங்கியது.
- செப்டம்பர் 6 - லிஸ் டிரஸ், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக பதவியேற்ற மூன்றாவது பெண் ஆவார்.
- செப்டம்பர் 8 - மூன்றாம் சார்லஸ், ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக பதவியேற்றார்.
- அக்டோபர் 25 -ரிஷி சுனக் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக பதவியேற்றார்.
- நவம்பர் 20 - திசம்பர் 18 - 2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் அர்கெந்தீனா உலகக் கோப்பையை கைப்பற்றியது. பிரான்சு இரண்டாமிடத்தையும், குரோசியா மூன்றாம் இடத்தையும், மொரோக்கோ நான்காமிடத்தையும் பெற்றது.
- டிசம்பர் 1 - டிசம்பர் 31- சீனாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு கொரானா பெருந்தொற்று பரவி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
Remove ads
இறப்புகள்
- சனவரி 2 – ரிச்சர்ட் லீக்கி, கென்னியத் தொல்மானிடவியலாளர் (பி. 1944)[29]
- சனவரி 6 – சிட்னி புவத்தியே, பகாமிய-அமெரிக்க நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1927)[30]
- சனவரி 19 – கஸ்பார்ட் உள்ளில், பிரான்சிய நடிகர் (பி. 1984)[31]
- சனவரி 22 – திக் நியாட் ஹன், வியட்நாமிய மதகுரு, அமைதி செயற்பாட்டாளர் (பி. 1926)[32]
- பெப்ரவரி 3 – அபு இப்ராகிம் அல்-ஹாசிமி அல்-குராசி, இசுலாமிய அரசு தலைவர், 2-வது கலீபா (பி. 1976)[33]
- பெப்ரவரி 6 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி (பி. 1929)[34]
- பெப்ரவரி 12 – இவான் ரியட்மேன், கனடிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1946)[35]
- மார்ச் 4:
- ரோட் மார்ஷ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1947)[36]
- சேன் வார்ன், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1969)[37]
- மார்ச்சு 23 – மாடிலின் ஆல்பிரைட், அமெரிக்காவின் முதல் பெண் வெளிநாட்டமைச்சர் (பி. 1937)[38]
- மே 13 - அபுதாபி நாட்டு மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவருமான சேக் கலீபா பின் சயத் அல் நகியான் தனது 73வது வயதில் காலமானார்.[39]
- சூலை 31 - அல்கொய்தா தலைவர் ஐமன் அழ்-ழவாகிரி, காபூலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்டார்.
- ஆகஸ்டு 30 - சோவியத் ஒன்றியத்தின் இறுதி அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் தமது 91வது அகவையில் உடல்நலக்குறைவால் மறைந்தார்.
- செப்டம்பர் 10 - ஐக்கிய இராச்சியத்தின் அரசி இரண்டாம் எலிசபெத் தமது 96வது அகவையில் காலமானர்.
- செப்டம்பர் 15 - மலேசியாவின் தமிழர் தலைவர் டத்தோ சாமிவேலு தமது 86வது அகவையில் காலமானார்.[40]
- டிசம்பர் 29 - பிரேசில் நாட்டின் உலக கால்பந்தாட்ட வீரர் பெலே தமது 82வது அகவையில் மறைந்தார்.
- டிசம்பர் 31 -போபாண்டவர் பெனடிக் தமது 95வது அகவையில் மறைந்தார்.[41]
Remove ads
முன்னறிவிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள்
- சனவரி 1 - இசை நவீனமயமாக்கல் சட்டம் 2018 இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டத்தை இடைக்காலமாக நீட்டிக்க முடியாது என்று கருதி, 1923க்கு முன் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஒலிப்பதிவுகளும் அமெரிக்காவில் பொதுத் தளத்தில் நுழையும்; இதனுடன், 1926இல் வெளியிடப்பட்ட புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் பிற படைப்புகளும் பொதுத் தளத்தில் நுழையும்.[42]
- சனவரி 4 – 2022 இத்தாலிய அதிபர் தேர்தல்
- சனவரி 8 - வெள்ளி 0.2658 AU (39.76 மில்லியன் km; 24.71 மில்லியன் mi; 103.4 LD) ஐ கடக்கும் பூமியிலிருந்து.[43]
- சனவரி 26 - இந்தியக் குடியரசு நாள் விழா
- சனவரி 30 – 2022 போர்த்துகல் சட்டமன்றத் தேர்தல்
- பிப்ரவரி 4 - பிப்ரவரி 20 - 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீன தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெறும். இது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இரண்டையும் நடத்தும் முதல் நகரமாகும்.[44]
- பிப்ரவரி 6 - இன்னும் வாழ்ந்து ஆட்சி செய்தால், ராணி II எலிசபெத் இந்த தேதியில் தனது பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாடுவார், அரியணையில் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது, இது அவருக்கு முன் வேறு எந்த பிரித்தானிய மன்னரும் நடத்தவில்லை.[45]
- பிப்ரவரி 28 - ஐக்கிய இராச்சியத்திடமிருந்து எகிப்து சுதந்திரம் அடைந்த 100 ஆண்டினைக் கொண்டாடுகிறது.
- பெப்ரவரி 10-மார்ச் 7 முடிய 5 இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுகிறது.
- மார்ச் - சிஈஆர்என் இன் லார்ஜ் ஹாட்ரான் மோதலின் 3 ஓட்டம் தொடங்கும்.[46]
- மார்ச் 9 – 2022 தென் கொரிய அதிபர் தேர்தல்
- மார்ச் 27 – 2022 ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தல்
- ஏப்ரல் 3 – 2022 செர்பியா பொதுத் தேர்தல்
- ஏப்ரல் 10 – 2022 பிரான்சு அதிபர் தேர்தல்
- ஏப்ரல் 14 - அக்டோபர் 9 - புளோரியாட் 2022
- மே 9 – 2022 பிலிப்பீன்சு பொதுத் தேர்தல் [47]
- மே 10 - 14 - யூரோவிஷன் பாடல் போட்டி 2022 இத்தாலியின் டுரினில் நடத்தப்படும்.
- மே 29 – 2022 கொலம்பிய குடியரசுத்தலைவர் தேர்தல்
- சூன் 15 - நீண்ட கால சேவை இல்லாத மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 பதிப்பிற்கான இண்டர்நெட் எக்சுபுளோரர் 11 நீண்ட கால சேவை முடிவடைகிறது.[48]
- சூலை 4 - ஒரு புதிய அரசியலமைப்பிற்கான உறுதியான முன்மொழிவு முன் வாக்களிக்கப்படவில்லை என்றால், சிலியில் உள்ள அரசியலமைப்பு மாநாடு இந்த தேதியில் வரைவுக்கு வாக்களிக்க வேண்டும், மேலும் இது சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு வருடக் காலக்கெடுவைக் கொடுத்து பின்னர் கலைக்கப்படும்.
- சூலை 6 - சூலை 31 - இங்கிலாந்தில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் பெண்கள் யூரோ 2022 [49]
- சூலை 7 - சூலை 17 - 2022 உலக விளையாட்டுகள்
- சூலை 25 - இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைகிறது. இந்தியாவில் காலவரையறைகள் எதுவும் இல்லாததால், கோவிந்த் மறுதேர்வு பெறத் தகுதியானவர்.[50]
- சூலை 28 - ஆகத்து 8 - 2022 பொதுநலவாய விளையாட்டுகள் [51]
- ஆகத்து 14 - பாக்கித்தான் தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது .
- ஆகத்து 15 - இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது .
- ஆகத்து 17 - இந்தோனேசியா தனது 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
- ஆகத்து 26 - செப்டம்பர் 15 - ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.[52]
- ஆகத்து 31 -- மலேசியா தனது 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
- செப்டம்பர் 11 – 2022 சுவீடன் பொதுத் தேர்தல்
- அக்டோபர் 2 – 2022 பிரேசில் பொதுத் தேர்தல்
- நவம்பர் 8 - 2022 அமெரிக்கத் தேர்தல்கள் 118வது காங்கிரஸைத் தேர்ந்தெடுக்கும். இது 2020 அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளைப் பிரதிபலிக்கும் வகையில் மறுபகிர்வுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் ஆகும்.[53]
- நவம்பர் 21 - திசம்பர் 18 - 2022 உலகக் கோப்பை காற்பந்து கத்தாரில் மே மற்றும் செப்டம்பர் இடையே கோடை, வெப்பம் இரண்டையுமே தவிர்க்க 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் நடைபெறும்.[54]
- திசம்பர் 15 - பொதுத் தேர்தலை முன் கூட்டியே நடைபெறாது. 2020-ல் செய்யப்பட்ட சுழற்சி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, லியோ வரத்கர் அயர்லாந்து குடியரசின் தாவோசீச் (பிரதமர்) மைக்கேல் மார்ட்டினுக்குப் பின் பதவியேற்பார்.[55]
Remove ads
நாள் அறிவிக்கப்படாத நிகழ்வுகள்
- 20 சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய கூட்டம் புதிய தலைமையினை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் ஜி ஜின்பிங் நிர்வாகத்தின் கீழ் தேர்ந்தெடுக்கும்.[56]
- சந்திர சுற்றுப்பாதையில் பல பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட வாழக்கூடிய விண்வெளி நிலையமான லூனார் கேட்வேயின் முதல் கூறு, தீர்மானிக்கப்படாத வணிக ஏவுகணை மூலம் வழங்கப்பட உள்ளது.[57]
- கருப்பு ஆற்றலை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா யூக்ளிட் விண்கலம் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.[58]
- ஜெர்மனி தனது கடைசி அணுமின் நிலையத்தினை படிப்படியாக அகற்றும் திட்டத்தின் கீழ் அகற்றத் திட்டமிட்டுள்ளது.[59]
- 73P/சுவாசூமந்வாச்மான் விண்கல் பொழிவை ஏற்படுத்தக்கூடும்.[60]
- இந்தியா தனது பயணிகளைக் கொண்ட முதல் விண்வெளி விமானத்தை ஏவத் திட்டமிட்டுள்ளது.[61]
- மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் சுங் மாநிலம் சுதந்திர வாக்கெடுப்பை நடத்தும்.[62]
- நியூ ஹரைசன்ஸ் கைப்பர் பட்டை ஆய்வை நிறைவுபெறும்.[63]
- உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.[63]
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3 நிலவு பயணத்தை இந்த ஆண்டு துவக்கத் திட்டமிட்டுள்ளது.[64]
- வீரா சி. ரூபின் கண்காணிப்பகம் முதல் ஒளி விழும் நிகழ்வு 2022 ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருடம் கழித்து முழுமையான அறிவியல் செயல்பாடுகள் தொடங்கும்.[65][66][67]
- 2022ஆம் ஆண்டு ஹங்கேரி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.[68]
- 2022ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ண துடுப்பாட்டப்போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது.[69]
- கபரோவ்ஸ்க் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் செர்ஜி ஃபுர்கலின் மீதான விசாரணை உருசியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
- 2022 ஆத்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் 21 மே 2022க்குப் பிறகு நடைபெற உள்ளது.
Remove ads
2022 நாட்காட்டி
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads