கூடுவாஞ்சேரி
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்திவரம்-கூடுவாஞ்சேரி (Nandivaram-Guduvancheri), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் அமைந்த ஒரு நகராட்சி ஆகும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ளது. இது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே, சென்னையில் இருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 603202 ஆகும். சென்னை புறநகர் பகுதியில் வளர்ந்து வளரும் குடியிருப்பு மற்றும் தொழில் வளர்ச்சிப் பகுதியாகும்.
கூடுவாஞ்சேரி நகராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)க்கும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
Remove ads
அருகமைந்த நகரங்களும், ஊர்களும்
- செங்கல்பட்டு - 19 கி.மீ.
- சென்னை - 37 கி.மீ.
- திருப்போரூர் - (கிழக்கில்) - 25 கி.மீ.
- திருப்பெரும்புதூர் - (மேற்கில்) - 42 கி.மீ.
- பீர்க்கன்கரணை - (வடக்கில்) - 5 கி.மீ.
- மறைமலைநகர் - (தெற்கில்) - 4 கி.மீ.
- சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் - 22 கி.மீ.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 வார்டுகள் கொண்ட நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி 11,252 குடும்பங்களையும், 44,098 மக்கள்தொகையும் கொண்டது. ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 22,264 மற்றும் பெண்கள் 21,834 ஆகவுள்ளனர். இதன் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 896 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.19%, இசுலாமியர்கள் 8.71%, கிறித்தவர்கள் 5.68%, சமணர்கள் 0.19%, மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[3]
Remove ads
கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையம்
சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார தொடருந்துகள் மற்றும் 6 பயணியர் தொடருந்துகளும் கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads