திபெத்தியர்களின் மைய நிர்வாகம்

From Wikipedia, the free encyclopedia

திபெத்தியர்களின் மைய நிர்வாகம்
Remove ads

திபெத்தியர்களின் மைய நிர்வாகம் அல்லது நாடு கடந்த திபெத்திய அரசு (Central Tibetan Administration) (Tibetan: བོད་མིའི་སྒྲིག་འཛུགས་, Wylie: bod mi'i sgrig 'dzugs, THL: Bömi Drikdzuk , வார்ப்புரு:IPA-bo, translated as Exile Tibetan People's Organisation)[1] 1959-இல் திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்த காரணத்தினால், திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா தலைமையிலான திபெத்திய மக்களின் நாடு கடந்த அரசு மற்றும் நாடாளுமன்றம் இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்த காங்ரா மாவட்டத்தின், தரம்சாலாவில் 28 ஏப்ரல் 1959-இல் நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் திபெத்தியர்களின் மைய நிர்வாகம்བོད་མིའི་སྒྲིག་འཛུགས་Bod mi'i sgrig 'dzugs / Bömi Drikdzuk, நிலை ...

1959-இல் அமைக்கப்பட்ட நாடு கடந்த திபெத்திய அரசை, இந்தியா ஆதரித்தாலும், சீனா இதுவரை அங்கீகரிக்கவில்லை.[2]

உலகாளாவிய திபெத்தியர்களும், இந்தியாவில் அகதிகளாக அடைக்கலம் அடைந்துள்ள திபெத்தியர்களும் இந்த மைய நிர்வாகத்தை ஆதரிக்கின்றனர். இந்தியாவில் அடைக்கலம் அடைந்த திபெத்தியர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, வாக்கு செலுத்துவதன் மூலம் தங்களின் நாடு கடந்த திபெத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர்.[1] 11 பிப்ரவரி 1991 அன்று நாடு கடந்த திபெத்தி மைய நிர்வாக அரசு, 11 பிப்ரவரி 1991 அன்று நெதர்லாந்து நாட்டின் டென் ஹாக் நகரத்தில் செயல்படும் பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பில் நிறுவன உறுப்பினரானது.[3][4]

14-வது தலாய் லாமா மைய நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்குவதுடன், திபெத்திய மக்களின் ஆன்மீகத் தலைவராக உள்ளார்.

Remove ads

திபெத் மீதான உரிமை

1951-ஆம் ஆண்டில் திபெத் நாட்டை சீனா ஆக்கிரமிப்பு செய்து தன் நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. இதனால் திபெத்திய பௌத்த சமயத் தலைவரான தலாய் லாமாக்களின் கீழ் 700 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்த திபெத், சீனாவின் ஆக்கிரமிப்பில் சென்ற பிறகு, 1951-இல் தலாய்லாமா தனது சீடர்கள் மற்றும் பொதுமக்களுடன் இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார்.[5]

Thumb
Department of Information and International Relations of the Central Tibetan Administration (formerly the Tibetan Government in Exile) in 2006
Remove ads

நிதியுதவிகள்

திபெத் விடுதலை நிதிக்கு உலகெங்கும் வாழும் திபெத்தியர்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் நிதியுதவி பெறுகிறது. மேலும் நாடு கடந்த திபெத்திய அரசு, தன் குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட் எனும் பச்சை புத்தகத்திற்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் நிதி பெறுகிறது.[6]சீனாவிடமிருந்து திபெத் விடுதலை பெறுவதற்கு, உலகெங்கும் உள்ள 18-வயது மேற்பட்ட திபெத்திய சமூகத்தினரிடம் நன்கொடையாக நிதி வசூலிக்கும் போது நீலப்புத்தகம் வழங்கப்படுகிறது.[6]

இந்தியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியங்கள் மனிதாபிமான முறையில் திபெத்தியர்களின் மைய நிர்வாகத்திற்கு நிதியுதவி வழங்குகிறது.[7][8][9]

ஆண்டுதோறும் திபெத்தியர்களின் மைய நிர்வாகம் பெறும் நிதியில் 22 மில்லியன் டாலர்கள் ஆகும். அதில் 7 மில்லியன் டாலர்கள் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக செலவிடப்படுகிறது.[10]

Remove ads

தலைமையிடம்

Thumb
திபெத்திய பௌத்த சமயம், பண்பாடு & இலக்கிய நூலகம், 2010

நாடு கடந்த திபெத்தியர்களின் மைய நிர்வாகம் மற்றும் நாடாளுமன்றம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், தரம்சாலா நகரத்திற்கு அருகே மெக்லியாட் கஞ்ச் எனும் பகுதியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத், திபெத்தியர்களின் மைய நிர்வாகத்தின் ஆடசிப் பகுதியாகும்.[11]

திபெத்தியர்களின் மைய நிர்வாகத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் 1,00,000 மேற்பட்ட திபெத்திய அகதிகள் வாழ்கின்றனர். இந்த திபெத்திய மக்களின் கல்வி மற்றும் சுகாதாரம் பணிகளில் ஈடுபடுவதுடன், திபெத்திய பண்பாட்டு நடவடிக்க்கைகளை ஊக்குவிக்கிறது.[12][13]

உட்கட்டமைப்பு

Thumb
திபெத்தியர்களின் மைய நிர்வாக அமைப்பின் அமைச்சரவைத் தலைவர் சாம்தோங் ரின்போச்சி, ஆஸ்திரேலியாவில் நிதியுதவிக் கூட்டத்தில் பேசினார். ஆண்டு பிப்ரவரி, 2006

திபெத்தியர்களின் மைய நிர்வாக அமைப்பு, 1991-இல் நாடு கடந்த திபெத்திய அரசின் அரசியல் அமைப்பை வகுத்தது.[14] இதன் தலைமை நிர்வாகியான லோப்சங் சங்கை நாடு கடந்த திபெத்திய அரசின் அதிபராக உள்ளார். அதிபருக்கு உதவியாக 7 பேர் கொண்ட அமைச்சரவை உள்ளது.

அமைச்சரவை

  • லோப்சாங் சாங்கே – அதிபர் (நாடு கடந்த திபெத் அரசு)
  • வென் கர்மா கெலெக் யுதோக் – சமயம் & பண்பாட்டு அமைச்சர்
  • சோனம் டாப்கியால் கோர்லாசாங் – உள்துறை அமைச்சர்
  • கர்மா யேசி – நிதி அமைச்சர்
  • பேமா யாங்சென் – கல்வி அமைச்சர்
  • பாக்பாங் செரி லாப்ராங் - பாதுகாப்பு அமைச்சர்
  • லாப்சாங் சாங்கே – தகவல் & வெளியுறவுத்துறை அமைச்சர்
  • சோக்கியாங் வாங்சூக் – சுகாதாரத் துறை அமைச்சர்
Remove ads

ஒப்பந்தங்கள்

2020-ஆம் ஆண்டு வரை, திபெத்திய அகதிகள் தொடர்பாக, திபெத்திய மைய நிர்வாக அமைப்பு, இந்திய அரசுடன் 45 ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது.[15][16]:120, 127–131[16]:120

வெளிநாட்டு உறவுகள்

திபெத்திய மைய நிர்வாக அமைப்பு, இறையாண்மையற்ற நாட்டின் பிரதிநிதியாக இல்லாதபடியால், இந்த அமைப்பை உலக நாடுகள் அங்கீகாரம் பெறவில்லை எனினும், இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் நிதியுதவிகள் பெறுகிறது.

ஐக்கிய அமெரிக்க நாடு

1991-இல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் திபெத்தை ஆக்கிரமிக்கப்பட்ட நாடு என்றும், தலாய்லாமா மற்றும் திபெத்திய மைய நிர்வாக அமைப்பை நாடு கடந்த திபெத்திய அரசின் உண்மையான பிரதிநிதி என கூறியுள்ளார்.[17].

1960-களில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நடுவண் ஒற்று முகமை மூலம் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாகப் பெற்றுக் கொண்டதாக திபெத்திய மைய நிர்வாகம் 1998-இல் செய்தி வெளியிட்டது.[18] இந்நிதியைக் கொண்டு, சீனாவிற்கு எதிராக கொரில்லாப் போரை நடத்துவது ஆகும்.[19]

பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இருக்கும் போது திபெத்திய மைய நிர்வாகத்தின் கொள்கைகளை ஆதரித்துப் பேசினார்.[20][21][22]

பன்னாட்டு அமைப்புகளில்

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள அமைதி அரண்மனையில் செயல்படும் பிரதிநிதித்துவம் அற்ற நாடுகள் மற்றும் மக்களின் அமைப்பில் 11 பிப்ரவரி 1991 அன்று நாடு கடந்த திபெத்திய அரசு நிறுவன உறுப்பினரானது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads