திருவேகம்பத்தூர்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவேகம்பத்தூர் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் தேவககோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருவேகம்பத்தூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1] இங்குள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதசுவாமி கோயில் ஆகும்.

திருவேகம்பத்தூர், மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இதன் தொலைபேசி குறியீடு எண் 0561 ஆகும். அஞ்சல் சுட்டு எண் 630408 ஆகும்.

திருவேகம்பத்தூர், மதுரைக்கு கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான சிவகங்கைக்கு கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும், மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருவேகம்பத்தூருக்கு கிழக்கில் திருவாடானை ஊராட்சி ஒன்றியம், வடக்கில் கல்லல் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.

இதன் அருகமைந்த நகரங்கள் தேவகோட்டை, சிவகங்கை, பரமக்குடி மற்றும் காரைக்குடி ஆகும். அருகமைந்த சிற்றூர்கள் புளியால், பெரியகாரை, கழனிவாசல், கவாத்துக்குடி, திரானி மற்றும் சக்கந்தி ஆகும்.

அருகமைந்த தொடருந்து நிலையம் தேவகோட்டை ரஸ்தா நிலையம் ஆகும்.

Remove ads

கல்வி நிலையங்கள்

  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பளி, கழனிவாசல் நெசவாளர் காலனி
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கவாத்துக்குடி
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சக்கந்தி
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திரானி

வழிபாட்டுத் தலங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads