துல் ஹிஜ்ஜா

From Wikipedia, the free encyclopedia

துல் ஹிஜ்ஜா
Remove ads

துல் ஹிஜ்ஜா (Dhu al-Hijjah, அரபி: ذو الحجة‎) என்பது இசுலாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மற்றும் கடைசி மாதமாகும். இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.

Thumbஇசுலாமிய நாட்காட்டி

  1. முஃகர்ரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமா அத்துல் அவ்வல்
  6. ஜமா அத்துல் ஆகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

இசுலாமிய நாட்காட்டியில், துல் ஹஜ் ஒரு மிக புனிதமான மாதம் ஆகும். இம்மாதத்தில் மக்காவிற்கு இஸ்லாமியரின் ஹஜ் (புனித பயணம்) நடைபெறுகிறது.

துல் ஹிஜ்ஜா என்றால் " ஹஜ்ஜுடைய மாதம் " அல்லது " யாத்திரை உடையவர் " என்று பொருள்.

Remove ads

காலம்

இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விட 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், துல் ஹஜ் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.

துல் ஹிஜ்ஜா மாத சிறப்பு நாட்கள்

  • துல் ஹிஜ்ஜா முதல் 9 நாட்கள் நோன்பு வைக்க படும்.
  • துல் ஹிஜ்ஜா முதல் 10 இரவுகள் தஹஜ்ஜத் தொழ வேண்டும்.
  • துல் ஹிஜ்ஜா 8,9 மற்றும் 10 தேதிகளில் ஹஜ் செய்ய வேண்டும்.[1]
  • துல் ஹிஜ்ஜா 9 ம் தேதி அரபா தினம் ஆகும்.
  • துல் ஹிஜ்ஜா 9ம் தேதி முதல் 13 ம் தேதி வரை தக்பீர் கூற வேண்டும்.
  • துல் ஹிஜ்ஜா 10 ம் தேதி இரவு ஈதுடைய இரவாகும்.
  • ஈத் உல் அதா என்கிற பக்ரீத் பண்டிகை துல் ஹஜ் 10 ம் தேதி தொடங்குகிறது. துல் ஹஜ் 12 ம் தேதி சூரியன் மறையும் போது முடிவடைகிறது
Remove ads

இஸ்லாமிய நிகழ்வுகள்

  • துல் ஹிஜ்ஜா 9 ம் தேதி மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரஃபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்யும் அரஃபா தினம் ஆகும்.
  • துல் ஹிஜ்ஜா 10 முதல் 12 வரை இஸ்லாமியர் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவர். இது இஸ்லாமியரின் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவரது மகன் இஸ்மாயிலை (அலை) இறைவனுக்காக தியாகம் செய்ய விருப்பம் தெரிவித்த நிகழ்ச்சிக்காக இஸ்லாமியரால் கொண்டாடப்படுகிறது.
  • துல் ஹிஜ்ஜா 18 ம் தேதி கலிபா உஸ்மான்(ரலி) நினைவு தினம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads