தெரியல் சியார்சு

From Wikipedia, the free encyclopedia

தெரியல் சியார்சு
Remove ads

தெரியல் சியார்சு (Darial Gorge) என்பது உருசியாவிற்கும் சியார்சியாவிற்கும் இடையிலான எல்லையில் உள்ள ஒரு நதி பள்ளத்தாக்காகும். இது இன்றைய விளாடிகாவ்காசின் தெற்கே கசுபெக் மலையின் கிழக்கு அடிவாரத்தில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கு தெரெக் நதியால் சூழப்பட்டுள்ளது. இது சுமார் சுமார் 13 கிலோமீட்டர் (8.1 மைல்) நீளம் கொண்டது. பள்ளத்தாக்கின் செங்குத்தான கருங்கல் பாறைச் சுவர்கள் சில இடங்களில் 1,800 மீட்டர் (5,900 அடி) உயரம் வரை நீண்டிருக்கும். [1]

Thumb
இலூய்கி வில்லரி என்பவரின் ஃபயர் அண்ட் வால் இன் தி காகசஸ் (1906) என்ற புத்தகத்தில் இடம்பெற்ற கணவாயின் புகைப்படம்
Thumb
பள்ளத்தாக்கில் வடக்கே காணும் ஒரு காட்சி ( வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் உருசிய சோதனைச் சாவடிக்கு 8 கி.மீ தெற்கே)
Remove ads

வரலாறு

பாரசீக மொழியில் "ஆலன்சின் வாயில்" என்று பொருள்படும் "தார்-இ ஆலா" என்பதிலிருந்து தெரியல் என்றச் சொல் உருவானது. கி.பி முதல் நூற்றாண்டுகளில் ஈரானிய நாடோடி ஆயர் பழங்கால மக்களான ஆலன்கள் கணவாயின் வடக்கே நிலங்களை வைத்திருந்தனர். இது பண்டைய காலங்களில் உரோமானி, சாசானிய ஆட்சியாளர்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள கோட்டை ஐபீரிய வாயில்கள் [a] அல்லது காக்கேசிய நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. கணவாய் சியார்சிய ஆண்டுகளில் தெரியலானி பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரேக்க புவியியலாளர், இசுட்ராபோ இதை "காக்கேசிகா கோட்டை" என்றும் "குமானா கோட்டை" என்று குறிப்பிட்டார். தொலெமி, "சர்மாட்டிகா கோட்டை" எனக் குறிப்பிட்டுள்ளார். இது சில நேரங்களில் காக்கேசிகா கோட்டை "காசுபியா கோட்டை" என்றும் அழைக்கப்பட்டது (இதே போன்ற "வாயில்" எனப் பொருள்படும் பெயர் தெர்பெந்த்திலுள்ள காசுப்பியன் கடல் அருகில் உள்ளது). மேலும், பிந்தைய சோவியத் நாடுகளிலுள்ள துருக்கி மொழி பேசும் தாதர்கள் இதை தெரியோலி என்று அழைக்கிறார்கள். [2] [1] [2]

பேரரசர் அலெக்சாந்தர் பெயர் குறிப்பிடப்படாத கணவாயில் இரும்பாலன வாயில்களை கட்டியதாக யூத வரலாற்றாசிரியர் ஜொசிபசு எழுதியுள்ளார். [3] சில இலத்தீன் மற்றும் கிரேக்க ஆசிரியர்கள் தெரியலுடன் அடையாளம் காணப்பட்டனர். [4]

252-253 ஆம் ஆண்டில், சாசானியப் பேரரசு ஐபீரியாவைக் கைப்பற்றி இணைத்தபோது, தெரியல் கணவாய் சாசனியர்களின் கைகளில் விழுந்தது. [5] தெரியல் கணவாயின் கட்டுப்பாடு 628 ஆம் ஆண்டில் மேற்கு துருக்கிய அரசாக மாறியது. தோங் யாபு ககான் ஐபீரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன் அனைத்து நகரங்கள் மற்றும் கோட்டைகளின் கட்டுப்பாட்டை தனக்குக் கீழ் கொண்டுவந்து, ஒரு சுதந்திர வர்த்தகத்தையும் நிறுவினார். [6] கணவாயின் கட்டுப்பாடு 644 இல் அரபு ராசிதீன் கலீபாக்களிடம் மாறியது. [7] பின்னர், இது சார்சியா இராச்சியத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. ஈல்கானரசுக்கும், தங்க நாடோடிக் கூட்டத்திற்குமிடையே ஒரு போர் நடைபெற்றது. பின்னர் 1801-1830 இல் சார்சியா இராச்சியம் இணைக்கப்பட்ட பின்னர் உருசியப் பேரரசால் கைப்பற்றப்படும் வரை மறைமுகமாக சபாவித்துகளாளும், குவாஜர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியம் சிதையும் வரை இது உருசிய கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முக்கிய உருசிய பாதுகாப்பு அரணாக இருந்தது.

Remove ads

முக்கியத்துவம்

காக்கேசிய மலைத்தொடரைக் கடக்கும் இரண்டு பகுதிகளில் ஒன்றான தெரியல் கணவாய் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றொன்று அலெக்சாந்தரின் வாயில்கள் ஆகும். இதன் விளைவாக, குறைந்தது 150 கி.மு. முதல் தெரியல் சியார்சு பாதுகாப்பாக இருந்துள்ளது. [1] ஒரு பழங்கால கோட்டையின் இடிபாடுகள் இன்னும் காணப்படுகின்றன. இந்த கணவாய் வடக்கு மற்றும் தெற்கு காக்கேசியத்தை இணைக்கும் பல சாலைகளுக்கு ஒரு மைய புள்ளியாக செயல்பட்டது. மேலும் அதன் இருப்புக்கும் போக்குவரத்துக்கு திறந்திருந்தது.

சியார்சிய இராணுவச் சாலையின் இந்த பகுதியைக் காக்கும் உருசியக் கோட்டை ஒன்று பள்ளத்தாக்கின் வடக்கு முனையில் 1,447 மீட்டர் (4,747 அடி) உயரத்தில் கட்டப்பட்டது .

உருசிய கவிதைகளில் பள்ளத்தாக்கு அழியாமல் இருக்கிறது. குறிப்பாக தி டெமான் என்ற கவிதையில் இலெர்மொண்டோவ் இதைப் பற்றி குறிப்பிடுகிறார். இது காக்கசசில் காதலுக்கான முக்கிய இடங்களில் ஒன்றாக அறியப்பட்டுள்ளது.

Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

  1. "Garrison of the Iberians" (Greek: Iouroeipaax)

மேற்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads