தெற்காசிய கற்காலம்

From Wikipedia, the free encyclopedia

தெற்காசிய கற்காலம்
Remove ads

தெற்காசிய கற்காலம் (The South Asian Stone Age ) என்பது தெற்கு ஆசியாவில் மனிதர்கள் வாழ்ந்த பழங்கற்காலம் இடைக் கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகிய மூன்று காலகட்டத்தையும் உள்ளடக்கியது ஆகும். உடலமைப்பு ரீதியான நவீன நிறைநிலை மனிதர்கள் தெற்காசியாவில் வாழ்ந்து இருப்பதற்கான பழமையான சான்றுகள் இலங்கையின் படாடோடாலென மற்றும் பெலிலென [ குகைத் தளங்களில் காணப்பட்டுள்ளன[1]. இன்று மேற்கு பாக்கித்தான் என்றழைக்கப்படும் பழங்கால மெகெர்கர் பகுதியில் புதிய கற்காலம் 7000 ஆண்டுகள் தொடங்கி 3300 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும் இங்குதான் செப்புக்கால மனிதர்கள் தோன்றினர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கி.மு 3000 ஆண்டுவரை இடைக்கற்காலமும் கிமு 1400 ஆண்டு வரை புதிய கற்காலமும் தென்னிந்தியாவில் நீடித்து இருந்துள்ளன. இதைத் தொடர்ந்து செப்புக் காலம் முடிவுக்கு வந்து பெருங்கற்கால நிலைமாறும் காலம் நீடித்துள்ளது. கி.மு 1200 முதல் கி.மு 1000 வரையான ஆண்டுகளில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஒரே காலகட்டத்தில் இரும்புக் கால மனிதர்களின் தொடக்கம் நிகழ்ந்துள்ளது. ( வண்ணம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்ட கலாச்சாரம், அல்லூர் )

Thumb
தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு முந்திய மத்திய கிருஷ்ணா-துங்கபத்திரை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கிடைத்த தொல்பொருள் சான்றுகள் பழங்கற்கால கலாச்சாரத்தை உறுதி செய்கின்றன.
Thumb
பீம்பேட்கா பாறை ஓவியங்கள், மத்தியப்பிரதேசம், இந்தியா.
Thumb
கற்காலம்- எழுத்துக்கள் எடக்கல் குகைகள் கேரளா, இந்தியா.
Thumb
கேட்டாவரம் பாறை ஓவியஙகள், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
Remove ads

ஓமோ எரக்டசு அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள்

பாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பகுதியில் சோவன் ஆற்றுப் பாதையில் இருந்த போதொகர் பிடபூமியில் கடையூழி சகாப்தத்திற்கு பிந்தைய காலத்தைச் சார்ந்த ஓமோ எரக்டசு எனப்படும் நிமிர்ந்த நிலை மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள். இப்பகுதி தற்போதைய இராவல் பிண்டிக்கு அருகில் உள்ளது, பாக்கித்தான், நேபாளம் மற்றும் தற்போது இந்தியாவிலுள்ள சிவாலிக் மலைப் பகுதிகளில் சோவனிக கலாச்சாரத்தின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன[2].

இருமுகக் கைகோடாரிகள் மற்றும் வெட்டுக்கற்களைப் பயன்படுத்திய கலாச்சாரத்தினர் மத்திய கடையூழிக் காலத்தில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது[3]. தழும்பழி வகை கோடாரிகளும் கீழைப் கீழைப் பழங்கற்கால வெட்டும் கருவிகளும் ஏறக்குறைய இதே காலகட்டத்தில் தோன்றியிருக்கலாமென நம்பபபடுகிறது.

Remove ads

ஓமோ செபியன்கள் அல்லது தற்கால மனிதர்களின் வருகை

மைட்டோகாண்ட்ரியாவில் உள்ள டி.என்.ஏ. குறித்த ஆய்வு முடிவுகள், ஓமோ செபியன் எனப்படும் தற்கால மனிதன் சுமார் 75,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஆசியாவில் குடிபுகுந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன[4][5]. இவ்வாறு குடியேறிய பரம்பரையின் சந்ததி அல்லது நேரடி வாரிசாக உள்ள ஒரு மனிதன் மதுரையின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமத்தில் வாழ்கிறார் என்று ஒய் குரோமோசோம் குறித்த ஓர் பகுப்பாய்வு தெரிவிக்கிறது[6].தெற்காசியாவில் இருந்த இம்மக்கள் 40000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியா வழியாக மேலும் ஆத்திரேலியாவிற்கு சென்றிருக்கலாம். தற்கால மனிதன் தெற்காசியாவில் இருந்ததற்கான சான்றுகளை இலங்கையிலுள்ள குகைத்தளங்கள் வழங்குகின்றன. இச்சான்றுகளின் படி தற்கால மனிதர்களின் வயது 34000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மேலும் இவர்களின் வயது 18000 முதல் 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெற்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள பெலன் பள்ளத்தாக்கில் கிடைத்த சான்றுகளின் கதிரியக்கக் கார்பன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேல் பழையகற்காலம் முழுவதும் மனிதன் பீம்பேட்கா பாறை வாழிடங்களில் வாழ்ந்துள்ளான் என்பதை கி.மு 30000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன[7][8] . மற்றும் அங்குள்ள அரங்க பாறைவாழிடங்களின் இறுதியில் சிறிய கோப்பை வடிவ அழுத்தங்கள் காணப்படுகின்றன. இவற்றின் வயது சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு[9] முற்பட்டதாகும். சிவாலிக் மற்றும் போட்வார் பிரதேசங்களும் முதுகெலும்பிகளின் புதைப் படிவு எச்சங்களையும் பழையகற்கால கருவிகளையும் வெளிப்படுத்துகின்றன[10] . பெரும்பாலும் சிலிக்கா, சூரியக் காந்தக்கல், படிகக்கல் போன்றவற்றை இக்கற்கால மக்கள் உபயோகித்துள்ளனர்.

Remove ads

புதிய கற்காலம்

உணவு உற்பத்திக்கு முந்தைய பீங்கான் பயன்படுத்தாத புதிய கற்கால மக்கள் கி.மு 7000 முதல் கி.மு 5500 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர். பீங்கான் உபயோகித்த புதிய கற்கால மனிதர்கள் கி.மு 3300 வரை அரப்பா நாகரிகத்திற்கு முன்பு வரை செப்பு காலத்துடன் இணைந்து வாழ்ந்துள்ளனர்[11]. கி.மு 7100 ஆம் ஆண்டுகளில் இருந்த புதிய கற்கால மனிதர்களுக்கு ஆதாரமான தொல் பொருட்கள் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் சூசி என்னுமிடத்தில் கண்டறியப்பட்டுள்ளன[12].

தென்னிந்தியாவில் புதிய கற்காலம் கி.மு 3000 ஆண்டில் தொடங்கி கி.மு 1400 வரை நீடித்துள்ளது. ஆந்திரா கர்நாடகா பகுதியில் தொடங்கி தமிழ்நாடு வரை விரிவடைந்திருந்த புதிய கற்கால மனிதனின் வயது கி.மு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் என சாம்பல் மேடுகள் சான்று பகிர்கின்றன. வட இந்தியாவிலும் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகள் பெருங்கற்கால மக்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கு இடம் பெயர்ந்ததை உறுதிபடுத்துகின்றன[13] . பெருங்கற்கால மக்களின் காலம் கி.மு 1000 என்பதை இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகள் தெளிவாக உறுதி செய்கின்றன. இத்தாழிகள் தமிழகத்தின் பலபகுதிகளில் கிடைத்துள்ளன. குறிப்பாக திருநெல்வேலிக்கு 24 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்திருப்பவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இத்தாழிகளின் மேல் தமிழ் பிராமி வரிவடிவங்கள் காணப்பட்டன. மேலும் இங்கு கிடைத்த மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் மற்றும் எலும்புகள், உமி, கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடாரிகள் போன்ற தொல்பொருட்கள் பெருங்கற்கால மனிதனின் காலம் சுமார் கி.மு 2800 என உறுதி செய்கின்றன. மனிதநாகரிகம் குறித்து கூடுதல் அறிவைப்பெற தொல்பொருள் ஆய்வாளர்கள் எதிர்காலத் திட்டங்களுடன் ஆதிச்சநல்லூர் ஆதாரங்களை நோக்கி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை[14][15].

குறிப்புகள்

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads