தேசிய நெடுஞ்சாலை 527ஈ (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 527ஈ (National Highway 527D (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

விரைவான உண்மைகள் 527D தேசிய நெடுஞ்சாலை 527D, வழித்தடத் தகவல்கள் ...

தேசிய நெடுஞ்சாலை 527ஈ முன்பு தே. நெ. 28அ என்று அழைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 527ஈ என்பது தே. நெ. 27-இன் ஒரு பகுதியாகும். இது தே. நெ. 44-க்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது நீண்ட தேசிய நெடுஞ்சாலையாகும்.

தே. நெ. 527ஈ நேபாளத்தை முக்கிய இந்தியக் கடல் துறைமுகங்களான கொல்கத்தா, ஹால்டியா துறைமுகத்துடன் இணைக்கிறது. பல்வேறு நாடுகளுக்குப் பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இதன் வழியே செய்யப்படுகிறது.

தே. நெ. 527ஈ பீகாரின் கிழக்கு சம்பாரனில் உள்ள பிப்ரகோத்தியில் தொடங்கி, இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ரக்ஸால் நகரில் முடிவடைகிறது. இது மோதிஹாரி (கிழக்கு சம்பாரண் சுகௌலியின் மாவட்டத் தலைமையகம், ராம்கர்வா வழியாகச் சென்று, இந்திய நகரமான ரக்ஸாலை நேபாளத்தின் எல்லையோர நகரமான பிர்குஞ்சுடன் இணைக்கும் இந்தியா-நேபாள எல்லைப்பகுதியில் முடிவடைகிறது

இது மோதிஹாரியில் உள்ள சடோனி சவுக்கில் மாநில நெடுஞ்சாலை 54-ஐ குறுக்கே சந்திக்கிறது. இது பிப்ரகோத்தி முதல் ரக்ஸால் வரை இரண்டு வழிச் சாலையாகும். எனவே நகரச் சந்திப்புகளில் ஏராளமான வாகனங்கள் நெரிசலில் சிரமப்படுகின்றன.

இந்த நெடுஞ்சாலை 527ஈ, தேசிய நெடுஞ்சாலை-27 உடன் அதன் சந்திப்புடன் இணைக்கிறது. இங்குத் தேசிய நெடுஞ்சாலை 227, சகியாவுடன் இணைக்கிறது. இது நர்ஹார், பாக்ரி பாலம், மதுபன், சிவார், சீதாமர்ஹி, ஹர்லாகி, உம்கான், ஜெய்நகர், லாகாஹா மற்றும் லாகாஹியை இணைக்கிறது.

அயோத்தியிலிருந்து சிவான் வழியாக வரும் தே. நெ. 227அ, தே. நெ. 27, தே. நெ. 527ஈ மற்றும் தே. நெ. 227ஊ ஆகியவற்றுடன் இணைக்கும் நகரம் சாகியா ஆகும்.

தே. நெ. 227ஊ அதன் சந்திப்பிலிருந்து தே. நெ. 227 உடன் சாகியா அருகே (சோர்மா சௌக்) பாக்ரிதயால், டாக்கா, புல்வாரியா காட் ஆகியவற்றை இணைத்து, இந்தியா-நேபாள எல்லைக்கு அருகே பீகார் மாநிலத்தில் உள்ள பைர்கனியாவில் முடிவடைகிறது.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads