தேசிய நெடுஞ்சாலை 69 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 69 (தே. நெ. 69)(National Highway 69 (India)) (முன்பு தேசிய நெடுஞ்சாலை 206 (ஹொன்னாவராவிலிருந்து பனவாரா பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை 234 (ஹுலியாரில் இருந்து முல்பகல் பிரிவு)) இந்தியாவில் 732 கி. மீ. (455 மைல்) நீளமுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையாகும். இது கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. மேற்கு முனையம் ஹொன்னாவரா அருகே தே. நெ. 66 சந்திப்பில் உள்ளது. சிராவுக்கு அருகே தே. நெ. 48 ஐ இணைக்கிறது. சிக்கபல்லாபூர் அருகே தே. நெ. 44ஐ இணைக்கிறது.[1][2] இதன் பழைய எண். தே. நெ. 234.
Remove ads
வழித்தடம்

தே. நெ. 69 ஹொன்னாவரில் தொடங்கி சாகரா, சீமக்கா, தரிகேரே, கடூர், பனவாரா, ஹுலியார், புக்கப்பட்டினம், சிரா, மதுகிரி, கோட்டடின்னே, கவுரிபித்தனூர், மஞ்சனஅள்ளி, சிக்கபள்ளாப்பூர், சிட்லகட்டா, சிந்தாமணி, ஸ்ரீநிவாசபுரா, முல்பகல், நங்காலி ஆகிய கர்நாடக மாநிலப் பகுதிகள் வழியாகச் சென்று ஆந்திரப் பிரதேசத்தில் பலமனேர், சித்தூர், பள்ளிபட்டு, புத்தூர் வழியாகச் சென்று ரேணிகுண்டாவில் முடிவடைகிறது.
மாநிலங்களில் பாதை நீளம்
- ஆந்திரப் பிரதேசம்-162 கி.மீ. (101 மைல்) [2]
- கர்நாடகா-570 கி.மீ. (350 மைல்) [2]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads