தேசிய நெடுஞ்சாலை 40 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 40 (National Highway 40 (India)), என்பது முன்னர் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த 4 மற்றும் 18 ஆகியவற்றின் பகுதிகளின் இணைவுச் சாலையாகும். இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை கர்னூலில் தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பில் தொடங்கிக் கடப்பா மற்றும் சித்தூர் வழியாகத் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் முடிவடைகிறது.[1][2] இது ராயலசீமா விரைவு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. கர்னூலுக்கும் கடப்பாவுக்கும் இடையே இந்த நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

இது கர்னூலில் தொடங்கி நந்தியால், அல்லகத்தா, மைடுகூர், கடப்பா, ராயச்சோட்டி, பைலேரு, சித்தூர் வழியாகச் சென்று ராணிப்பேட்டையில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 381 கி. மீ. ஆகும். இதில் 236.74 கி. மீ. தூரம் ஆந்திராவிலும் மற்றும் 27.00 km (16.78 mi) தமிழ்நாட்டிலும் செல்கிறது.[2][3]

கர்னூல் ↔ நந்தியால் ↔ அல்லகத்தா ↔ மைடுகூர் ↔ கடப்பா ↔ ராயச்சோடி ↔ பிலேரு ↔ சித்தூர் ↔ ராணிப்பேட்டை


Remove ads

விரிவாக்கம்

06 ஏப்ரல் 2025 அன்று பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 40ன் தமிழ்நாடிற்குள் செல்லும் 28 கி.மீ நீளமான வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டைக்கு இடையிலான சாலையினை ரூ.1338 கோடி மதிப்பினில் நான்கு வழியாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டினார்.[4] [5]

இந்த திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை - வாலாஜாபாத் சுற்றுப்பாதை 10கி.மீ நிளத்தில், 4 பெரிய பாலங்கள், 2இரயில்வே பாலங்கள், இருபுறமும் இருவழிச் சேவை சாலைகள், கட்டுபடுத்தப்பட்ட அனுகுச்சாலையுடன் கூடிய நான்குவழிப்பாதைகளாக கட்டப்படுகின்றன.[6]

Remove ads

நன்மைகள்

  • பெல், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எளிதில் சென்னைக்கும், பெங்களூருக்கும் எடுத்து செல்ல இயலும்.

சந்திப்புகள்

தே.நெ. 44 கர்னூல் அருகில் முனையம்[7]
தே.நெ. 340C கர்னூல் அருகில்
தே.நெ. 544D நந்தியால் அருகில்
தே.நெ. 67 மைடுகூர் அருகில்
தே.நெ. 716 கடப்பா வெளிச்சாலை அருகில்
தே.நெ. 340 ராயச்சோடி அருகில்
தே.நெ. 71 பீலேர் அருகில்
தே.நெ. 140 பூதலப்பட்டு அருகில்
தே.நெ. 69 சித்தூர் அருகில்
தே.நெ. 48 இராணிப்பேட்டை அருகில் முனையம்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads