நக்காடா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நக்காடா (Naqada) (அரபி: نقادة, Naqāda, வார்ப்புரு:Lang-cop Nekatērion[1]) தெற்கு எகிப்தின் கியூ ஆளுநகரத்தில், நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த பண்டையத் தொல்லியல் நகரம் ஆகும். நக்காடா நகரத்தின் பெயரைக் கொண்டு எகிப்தில் கிமு 4,400 முதல் கிமு 3,000 முடிய நிலவிய தொல்லியல் பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு என்று எகிப்தியவியல் அறிஞர்கள் பெயரிட்டனர்.
Remove ads
வரலாறு மற்றும் அகழாய்வுகள்
வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் நக்காடா நகரத்தில், கிமு 3,500 முதல் எகிப்தியக் கடவுள்களான இரா மற்றும் அமூன் வழிபாட்டு மையமாக விளங்கியது. மேலும் பெரிய அளவில் கோயில்கள் எழுப்பப்பட்டது. [2]
நக்காடா நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகள் மூலம், வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 4,400 முதல் கிமு 3,000 வரையில் விளங்கிய நக்காடா பண்பாட்டின் இறுதியில் துவக்ககால அரசமரபுகள் குறித்த செய்திகள் அறியமுடிகிறது.
படக்காட்சிகள்
- நக்காடா பண்பாட்டு காலத்திய தீக்கல்லால் செய்யப்பட்டு அரிவாள்
- நக்காடா நகரத்தில் கண்டுபிடித்த கைக்கோடாரி
- நக்காடாவில் கண்டெடுத்த இரண்டாம் அமெனம்ஹத்தின் கருங்கல் சிற்பம்
- முதல் நக்காடா பண்பாட்டுக் காலத்தில் எலும்பில் செய்யப்பட்ட பெண் சிற்பம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads