நக்காடா பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
25°57′00″N 32°44′00″E நக்காடா பண்பாடு (Naqada culture) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பண்டைய எகிப்தின் வெண்கலக் காலத்தில் ஏறத்தாழ கிமு 4400 முதல் கிமு 3000 முடிய இத்தொல்லியல் பண்பாடு விளங்கியது. தெற்கு எகிப்தில் அமைந்த நக்காடா எனும் பண்டைய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டின் பெயர் அமைந்தது. 2013- ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரிம கதிரியக்க ஆய்வில், நக்காடா பண்பாடு கிமு 3,800-3,700 காலத்தியது என முடிவு செய்துள்ளனர். [1]

நக்காடா பண்பாட்டின் இறுதியில், துவக்க வெண்கலக் காலத்தில் விளங்கிய மூன்றாவது நக்காடா பண்பாட்டுக் காலத்தின் போது, துவக்க கால எகிப்திய அரசமரபினர் கிமு 3,150 முதல் கிமு 2,686 முடிய தெற்கு எகிப்தையும், வடக்கு எகிப்தையும் ஒன்றிணைத்து ஆண்டனர்.
Remove ads
நக்காடா பண்பாட்டின் காலவரிசை
பிரித்தானிய எகிப்தியவியல் அறிஞர் வில்லியம் பிளின்டர்ஸ் பேட்ரி, நக்காடா பண்பாட்டுக் கால வரிசையை மூன்று காலமாக வகைப்படுத்தியுள்ளார்.
- முதலாம் நக்காடா காலம் - (அம்ரா தொல்லியல் களம்)
- இரண்டாம் நக்காடா காலம் - (கெர்செக் தொல்லியல் களம்)
- மூன்றாம் நக்காடா காலம்- (செமைனா தொல்லியல் களம்)
படக்காட்சிகள்
- நக்காடா பண்பாட்டுக் காலத்திய சமைக்கும் பாத்திரம், அறிவியல் கண்டுபிடிப்பில் இப்பாண்டத்தில் கட்டியான மாமிசமும், தேனும் இருந்தது.
- நீர்யானையின் தந்தத்தில் செய்த பொருட்கள்
- முதல் நக்காடா காலத்திய நத்தையின் சங்கு
- ஜாடியின் மேற்பரப்பில் படகின் உருவம்
- காளையின் உருவம் பொறித்த தட்டு
- போர்க்களக் காட்சியை சித்தரிக்கும் கல்வெட்டு, கிமு 3,100
நார்மெர் கற்பலகை
மூன்றாம் நக்காடா காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர் நார்மெர் எழுப்பிய சிற்பத்தாலான கற்பலகை 63 செண்டிமீட்டர் (2.07 அடி) உயரம் கொண்ட அழகிய பதக்க வடிவில் அமைந்துள்ளது. இக்கற்பலகையின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மன்னர் நார்மெர் உருவத்துடன் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது


அகழாய்வுகளும், நினைவுச் சினனங்களும்
வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்தின் நக்காடா பண்பாடு I காலத்திய எகிப்தியர்கள், தெற்கு எகிப்தின் நூபியா மற்றும் மேற்கு எகிப்தின் பாலைவனச் சோலைப் பிரதேசங்கள் மற்றும் மத்திய தரைக் கடலின் கிழக்கு கரையில் உள்ள மெசொப்பொத்தேமியாவில் வாழும் மக்களிடையே வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். [2]கூரான கற்கருவிகளை செய்வதற்கு தேவையான, எரிமலைக் கரும்பளிங்குப் பாறைகளை எத்தியோப்பியாவிலிருந்து வாங்கி வந்தனர்.[3] நெக்கென் நினைவுச் சின்னக் கட்டிடத்தின் அகழாய்வில் கரித்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கரித்துண்டுகள் லெபனான் நாட்டின் தேவதாரு மரத்தின் கரித்துண்டுகள் போன்று இருந்தது.[4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads