நஜீப் இரண்டாம் அமைச்சரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நஜீப் இரண்டாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 19-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Najib Kedua; ஆங்கிலம்: Second Najib Cabinet; சீனம்: 第二届纳吉内阁); என்பது மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான மலேசியாவின் 19-ஆவது அமைச்சரவை ஆகும்.
மலேசியாவின் 19-ஆவது நாடாளுமன்ற அமைச்சரவையைப் பிரதமர் நஜீப் ரசாக், 2013 மே 15 மாலை 5.15-க்கு அறிவித்தார். 2013 மே 5-இல் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இருப்பினும், எதிர்க் கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ராக்யாட், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் ஏழு இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்றியது. மலேசியப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 133 இடங்களையும், அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் 89 இடங்களையும் கைப்பற்றின.
Remove ads
பொது
இந்த அமைச்சரவையில் மலேசிய சீனர் சங்கத்தைச் சார்ந்த எவரும் பிரதிநிதிக்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் மிக மோசமான தோல்வியைக் கண்டது. அதனால், மலேசியப் பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி, மேலும் குறைவான இடங்களைப் பெறுமானால், மலேசிய சீனர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் எவரும் அரசாங்கப் பதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று, தேர்தலுக்கு முன்னரே அக்கட்சியின் தலைமைத்துவம் அறிவிப்பு செய்து இருந்தது.
இந்தப் பொதுத் தேர்தலிலும் அக்கட்சி மிக மோசமான தோல்வியைக் கண்டது. அதனால், நடுவண் அரசாங்கத்திலும் மாநில அரசாங்கத்திலும், மலேசிய சீனர்கள் எவரும் அரசுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒழுங்கு நடவடிக்கை
ஜொகூர் மாநில மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் ஜொகூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மலேசிய சீனர் சங்கத்தின் உச்சமன்றக்குழு அறிவித்துள்ளது.
சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதலான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய முன்னணிக்கு அந்த மாநிலங்களின் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியதால், அந்த மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலான அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளன.
Remove ads
மலேசிய இந்திய அமைச்சர்கள்
மலேசியாவின் புது அமைச்சரவையில் இந்தியர்கள் இருவர் முழு அமைச்சர்களாகவும், நால்வர் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள்:
- இயற்கைவள சுற்றுச் சூழல் அமைச்சர்: டத்தோ ஸ்ரீ கோவிந்தசாமி பழனிவேல்
- சுகாதார அமைச்சர்: டத்தோ டாக்டர் ச. சுப்பிரமணியம்
மலேசிய இந்திய துணை அமைச்சர்கள்
- துணைக் கல்வி அமைச்சர்: பி. கமலநாதன்
- துணை இளைஞர் துறை அமைச்சர்: மு. சரவணன்
- துணைக் கூட்டரசு பிரதேச அமைச்சர்: லோகா பாலா மோகன்
- பிரதமர் துறை துணை அமைச்சர்: பி. வேதமூர்த்தி (இண்ட்ராப் தலைவர்)
Remove ads
மலேசிய அமைச்சரவை முழுப் பட்டியல்
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads