நபிர்
இந்தோனேசியா, மத்திய பப்புவா, நபிர் பிராந்தியத்தில் ஒரு மாவட்டம்; ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நபிர் (இந்தோனேசியம்: Nabire; ஆங்கிலம்: Nabire; District of Nabire) என்பது இந்தோனேசியா, மத்திய பப்புவா மாநிலம், நபிர் பிராந்தியத்தில் உள்ள ஒரு மாவட்டம்; மற்றும் ஒரு நகரமாகும். நியூ கினியின் மேற்கு முனையில் அமைந்துள்ளது. இந்த நகரம் நபிர் பிராந்தியத்தின் நிர்வாக மையமாகவும் செயல்படுகிறது.
இந்த நகரம் தௌவு அதுரூரே வானூர்தி நிலையத்தால் (Douw Aturure Airport) சேவை செய்யப்படுகிறது.[3]
Remove ads
நிலவியல்
இந்த நகரம் நியூகினி தீவின் வடக்கு கடற்கரையில் சந்திரவாசி விரிகுடாவில் (Cenderawasih Bay) அமைந்துள்ளது.
நபிர் மாவட்டத்தின் எல்லைகள் பின்வருமாறு:
- வடக்கு - அமைதிப் பெருங்கடல்
- தெற்கு - நுமாமுரம் நீரிணை, துவைரி விரிகுடா, வோண்டாமா விரிகுடா
- மேற்கு - வோண்டமா விரிகுடா
- கிழக்கு - சந்திரவாசி விரிகுடா
மக்கள்தொகை
சமயம்
மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், நபிர் மாவட்டத்தில் வசிப்பவர்களின் சமயங்கள் பன்முகத்தன்மை கொண்டுள்ளன. நபிர் மாவட்டத்தில் பின்பற்றப்படும் சமயங்களின் விழுக்காடு:
- 61.45% கிறித்தவம்
- 48.65% சீர்திருத்த கிறித்தவம்
- 12.80% கத்தோலிக்கம்
- 8.20% இசுலாம்
- 0.21% இந்து
- 0.14% பௌத்தம்
காலநிலை
நபிர் நகரம். வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் (Af) கொண்டது; ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும்.
Remove ads
காட்சியகம்
- நபிர் மாவட்ட காட்சிப் படங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads