நாகநதி ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகநதி ஆறு (ஆங்கிலம்: Naganathi) என்பது இந்தியாவில் தமிழ் நாட்டின் பழைய வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பாயும் ஒரு ஆறு ஆகும். [1]
நாகநதி ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு ஆரணி வட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் மழைக்காலங்களில் நாகநதி ஓடைகளில் வரும் நீர் ஆவியாவதை தடுத்து நேரடியாக பூமிக்குள் செலுத்தக்கூடிய உறை கிணறுகள் 354 இடங்களில் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதனால் கோடையிலும் இப்பகுதியில் நெல், வாழை போன்ற தண்ணீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கந்திலி ஊராட்சி ஒன்றியம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வேலுார் மாவட்டத்தில் உள்ள [[குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்], பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு நதிகளின் குறுக்கே 18 இடங்களில் 3,768 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண் தொழிலாளர்களை மட்டும் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆரணி அருகே உள்ள படவேடு எனுமிடத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் செண்பகத் தோப்பு அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.
Remove ads
மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு
26 செப்டம்பர் 2021 அன்று உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு, தனது 81-வது மனதின் குரல் உரையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை மக்களுக்கு பாராட்டுகள். நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என்றார். [2][3] [4]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads