நாசரேத்து (தூத்துக்குடி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாசரேத்து (Nazerath), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நாசரேத்து எனப்பெயரிடப்பட்டது. இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தூய யோவான் பேராலயம் உள்ளது. நாசரேத் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தினர் அதிகளவில் உள்ளனர்.
நாசரேத்திற்கு கிழக்கே திருச்செந்தூர் 25 கி.மீ., வடக்கே தூத்துக்குடி 50 கி.மீ., மேற்கே திருநெல்வேலி 35 கி.மீ., தெற்கே சாத்தான்குளம் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
11.3 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 16,862 ஆகும்.
Remove ads
குடியேற்றம்
1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர்.[5]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads