நாச்சியார்புரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாச்சியார்புரம் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 8 சூலை 2019 முதல் 27 சூலை 2020 வரை முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் தினேஷ் கோபாலசாமி மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2] இந்த தொடர் 14 ஆகத்து 2020 அன்று 218 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதை
ஜோதி மற்றும் கார்த்தி, ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். ஆனால் ஜோதி அத்தை ஜெயலட்சுமி நடராஜனை தனது குடும்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டதால் அவர்களது குடும்பம் கடந்த காலத்தில் பிரிந்தது, ஜோதி அத்தை வேறு யாருமல்ல கார்த்தியின் தாய். ஜோதி மற்றும் கார்த்தி தங்கள் குடும்பங்களுக்கு எதிராக எவ்வாறு திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- தினேஷ் கோபாலசாமி - கார்த்திக்
- ரச்சித்தா மகாலட்சுமி - ஜோதி
- வடிவுக்கரசி - நாக ரத்னம்
துணை கதாபாத்திரம்
- தீபா நேத்ரன் - சீதாலட்சுமி
- பிரேமி வெங்கட் - ஜெயலட்சுமி
- கிரிஷ் - நடராஜன்
- தீபா சங்கர் - சரஸ்வதி
- வெங்கட் சுபா - ஜெயராம்
- ரேஷ்மா - சித்ரா
- பாரதி மோகன் - பொய்யாமொழி
- உஷா சாய் - மறிக்கொழத்து
- ஃபரினா அசாத் - ஷோபனா
- பவித்ரா ராஜசேகரன் - ஆண்டாள்
- காவ்யா - ஜானவி
- ரீமா - ஐஸ்வர்யா
- சுதா இராமானுசன் - சாந்தகுமாரி
- மது மோகன் - சாந்தகுமார்
- அழகப்பன் - பவுன்ராஜ்
- ஸ்ரீ குமார் - சிறப்புத் தோற்றம்
Remove ads
நடிகர்களின் தேர்வு
இந்த தொடரில் பிரிவோம் சந்திப்போம் தொடருக்கு பிறகு தினேஷ் கோபாலசாமி மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி கணவன் மனைவியானதுக்கு பிறகு இணைத்து நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.[3] வடிவுக்கரசி, கார்த்தி, பிரேமி வெங்கட், தீபா நேத்ரன் போன்ற பலர் முக்கியாகதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த தொடரின் கதை நாச்சியார்புரத்தில் உள்ள இரண்டு முக்கிய குடும்பம், அதற்கு நடுவில் நடக்கிற சண்டை, காதல், பிரிவுதான் கதை.[4]
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் 8 சூலை 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி, தற்போது சூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 3:00 மணிக்கு நேரம் மாற்றபட்டு ஒளிபரப்பானது.
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads