நாட்டரசன் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

நாட்டரசன் கோட்டைmap
Remove ads

நாட்டரசன் கோட்டை (ஆங்கிலம்:Nattarasankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கைக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில், காளையார்கோவிலுக்கு அருகில் உள்ளது.

விரைவான உண்மைகள்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,554 வீடுகளும், 5,860 மக்கள்தொகையும் கொண்டது.[4]

இது 18 சகி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9.87°N 78.57°E / 9.87; 78.57 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.

சிறப்புகள்

இங்கு கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இப்பேரூராட்சியில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தின் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முக்கியமாக 8ஆம் திருவிழா வெள்ளிரதம், இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.

கம்பன் கல்லறை

சோழநாட்டில் பிறந்த கம்பன் மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ என சோழ மன்னனைப் பழித்துப் பாடிவிட்டு, செட்டி நாட்டுப் பகுதிக்கு தனது இறுதிக் காலத்தைக் கழித்த பின் நாட்டரசன் கோட்டையில் மாண்டான் என்று கருதப்படுகிறது. அவரது கல்லறை இங்கு அமைந்திருக்கிறது.[7] கம்பன் தான் இயற்றிய இராம காதையை அரங்கேற்றிய பங்குனி மாதம் அத்த நாளில் இக்கல்லறைக் கோயில் வளாகத்தில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் நிறைவு விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads