நாயகன்
மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாயகன் 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குநர் மணிரத்னம் ஆவார். கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். இது, மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. டைம் வார இதழும், சிஎன்என்-ஐபிஎன் நிறுவனமும் இத்திரைப்படத்தை உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுமகளையும், பல தனியார் விருதுகளையும் வாங்கியது.
Remove ads
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சிறுவயதிலேயே தந்தையை இழக்கும் சக்திவேல் பம்பாயில் ஒரு இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த பெரியவரினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகின்றார். திடீரென அவர்கள் தங்கியிருந்த பகுதியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கொள்கையினை எதிர்க்கின்றார். அவ்வாறு எதிர்த்த அவரைக் காவல் துறையினரான இந்தி மொழிக்காரனால் அடித்து சிறையில் அடைக்கப்படுகின்றார். பின்னர் வெளியில் வரும் வேலு தன் தந்தையின் கொலைக்குக் காரணமாக விளங்கிய அக்காவல் துறை அதிகாரியைக் கொலை செய்கின்றார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு நாயகனாக விளங்குகின்றார். அனைவராலும் போற்றப்பட்டு அப்பகுதியினரால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். சிறிது காலம் கழித்து விபச்சாரிகளின் இல்லத்திற்குச் செல்லும் வேலு அங்கு தவறுதலாக கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவியை அவர் விரும்பியபடி திருமணம் செய்தும் கொள்கின்றார். அவ்வூர் மக்களுக்கு நல்ல செயல்களைச் செய்யும் வேலு நாயக்கர் பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபடுகின்றார். இதனைப் பார்க்கும் இவரின் மகள் அவரிடம் வாழப்பிடிக்காது அங்கிருந்து பிரிந்து செல்கின்றார். வேலு நாயக்கரின் மகள் காதலித்து மணம் செய்யும் காவல் அதிகாரியால் வேலு நாயக்கர் வலைவீசித் தேடப்படுகின்றார். இவரின் மீதிருந்த பற்றுதல் காரணமாக காட்டிக்கொடுக்க பொது மக்கள் மறுத்தனர். திடீரென வரும் காவல் துறையினரிடம் இருந்து வேலு நாயக்கரைக் காப்பாற்றுவதற்காக வயது போன அம்மையார் தன்னை தீவைத்துக் கொளுத்தினார். இதனைக் கண்டு மனம் நொந்த காவல் துறை அதிகாரி வேலு நாயக்கர் தன் மனைவியின் தந்தை எனத் தெரிந்து கொள்கின்றார். பொது மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதைப் பார்த்த வேலு நாயக்கர் தானகவே சரணடைந்துவிடுவதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனை அறிந்த பொது மக்கள் அவரின் விடுதலைக்காகக் காத்திருந்தனர். அவரைக் கைது செய்யத் தேவைப்படும்படி ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவரினால் கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரியின் மகனால் திடீரென சுட்டு வீழ்த்தப்படுகின்றார்.
Remove ads
நடிகர்கள்
- கமல்ஹாசன் - சக்திவேல் / வேலு நாயக்கர்
- சரண்யா - நீலா
- ஜனகராஜ் - செல்வம்
- டெல்லி கணேஷ் - ஐயர்
- விஜயன் - துரை[1]
- எம். வி. வாசுதேவராவ் - ஹுசைன் பாய், வேலு நாயக்கரின் வளர்ப்பு தந்தை
- டாரா - ஷகீலா, வேலு நாயக்கரின் தங்கை
- நிழல்கள் ரவி - சூர்யா, வேலு நாயக்கரின் மகன்
- கார்த்திகா - சாருமதி, வேலு நாயக்கரின் மகள்
- நாசர் - பட்டேல், துணை ஆணையர் காவல்துறை
- பிரதீப் சக்தி - கேல்கர், காவல் ஆய்வாளர்
- டீனு ஆனந்த் - அஜீத் கேல்கர்
- ஆர். என். சுதர்சன், ஆர். என். கிருஷ்ண பிரசாத், ஆர். என். ஜெயகோபால் - ரெட்டி பிரதர்ஸ்
- கிட்டி - வேலு நாயக்கரின் தந்தை (சிறப்புத் தோற்றம் )
- ஆதித்யா - சிறு வயது சக்திவேல், (சிறப்புத் தோற்றம் )
- குயிலி (சிறப்புத் தோற்றம் )
பாடல்கள்
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அவரின் 400வது திரைப்படமாகும். புலமைப்பித்தன் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார். 'நிலா அது வானத்து மேலே' பாடலை மட்டும் இளையராஜா எழுதியிருந்தார்.
Remove ads
வெளியீடும் விமர்சனமும்
நாயகன் திரைப்படம் 1987 அக்டோபர் 21 தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.[2] இத்திரைப்படம் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தெலுங்கு மொழியில் நாயக்குடு எனும் பெயரிலும், இந்தி மொழியில் வேலு நாயகன் எனும் பெயரிலும் வெளியானது. மேலும் இத்திரைப்படம் இந்தி மொழியில் தயவான் எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.
ஆனந்த விகடன் நாளிதழ் இப்படம் தமிழில் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளது என விமர்சித்து இப்படத்திற்கு 100இற்கு 60 மதிப்பெண்களை வழங்கியுள்ளது.[3]
Remove ads
விருதுகள்
60வது சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு இப்படம் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 10வது ஹாபிடட் திரைப்பட விழாவில் நாயகன் திரையிடப்பட்டது.[4]
35 வது தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா[5]
- சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
- சிறந்த ஒளிப்பதிவு - பி. சி. ஸ்ரீராம்
- சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி
சினிமா எக்ஸ்பிரஸ் விருது[6]
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1987 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி அந்த ஆண்டு நடைபெறவில்லை.
Remove ads
மறு உருவாக்கம்
இத்திரைப்படம் இந்தி மொழியில் தயவான் எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 அன்று, சரியாக ஓராண்டு கழித்து நாயகன் வெளியான அதே தேதியில் வெளியானது. இப்படத்தில் வினோத் கண்ணா, மாதுரி தீட்சித் நடித்துள்ளனர்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads