தில்லானா மோகனாம்பாள்
ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எம். என். நம்பியார், கே. பாலாஜி, டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ், சி. கே. சரஸ்வதி, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். தில்லானா மோகனாம்பாள் "கலைமணி" என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவலாகும். இது தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் 1957-58 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது.[1] புகழ்பெற்ற நடனக் கலைஞரான மோகனாம்பாளுக்கும், நாதசுவரம் இசைக்கலைஞரான சண்முகசுந்தரத்துக்கும் இடையிலான உறவை இந்தக் கதை சித்தரிக்கிறது.[2][3][4] நாவலுக்கான விளக்கப்படங்களை ஓவியக் கலைஞர் மற்றும் கேலிச்சித்திர ஓவியர் கோபுலு வரைந்தார்.[5][6]
Remove ads
கதைச் சுருக்கம்
நாதஸ்வரம் வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்றவரான சண்முக சுந்தரம் (சிவாஜி கணேசன்) எதையும் நேர்பட பேசக்கூடியவர். பரதநாட்டியம் ஆடுவதில் மிகவும் திறமைசாலியான மோகனாம்பாள் (பத்மினி) இருவரும் தங்களது முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மேல் ஒருவர் காதல் வயப்படுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருவரும் சண்டையிட்டுப் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் மீதக் கதையாகும்.
Remove ads
நடிகர்கள்
Remove ads
பாடல்கள்
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.
எண் | பாடல் | பாடியவர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | வாத்திய இசை | - | கண்ணதாசன் | 04:49 |
2 | மறைந்திருந்து 1 | பி. சுசீலா | 05:15 | |
3 | மறைந்திருந்து 2 | பி. சுசீலா | 05:18 | |
4 | நாதஸ்வர இசை 1 | - | 05:22 | |
5 | நாதஸ்வர இசை 2 | - | 03:46 | |
6 | நலந்தானா | பி. சுசீலா | 05:12 | |
7 | பாண்டியன் நானிருக்க | எல். ஆர். ஈஸ்வரி, எஸ். சி. கிருஷ்ணன் | 02:47 |
பாடல்களின் சூழல்கள்
1. நலந்தானா எனும் பாடல்:
சண்முக சுந்தரம் காயம் பட்டிருக்கிறார்.அவர் நாதசுரம் வாசிக்கும் மேடையில் மோகனா ஆடுகிறாள். காதலியான அவள் காதலனாகிய சண்முகத்தின் காயத்தைக் கண்டும் அவரது நலம் குறித்தும் 'இலைமறை காய் போல் பொருள் கொண்டு' கேள்வியாய் பாடலில் கேட்கிறாள்.
2. மறைந்திருந்து பார்க்கும்..
நாட்டியக்காரி மோகனாம்பாள் கோவிலில் நடனமாடுகிறாள். அவளது நடனத்தை தூண் மறைவில் இருந்து திருட்டுத்தனமாக நாதஸ்வர வித்வான் சண்முகம் பார்த்து இரசிக்கிறார். அதை அறியும் மோகனா அவரை 'சண்முகா' என பாடலுக்குள்ளேயே மறைமுகமாக அழைத்து 'பாவையின் பதம் காண நாணமா!?. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!?' என ஜாடைமாடையாகவும் கேலியாகவும் சண்முகத்தை பார்த்து வினவுவதாக அமைகிறது இந்த பாடல்
விருதுகள்
தேசிய விருதுகள்
- 1969 - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - குடியரசுத் தலைவரின் வெள்ளி பதக்கம்
தமிழக அரசின் விருதுகள்
- 1970 சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - இரண்டாவது இடம்
- 1970 - சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது - நடிகை பத்மினி
- 1970 - சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மனோரமா
மேற்கோள்கள்
நூல் பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads