பக்தியார் கில்ஜி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பக்தியார் கில்ஜி (Muhammad bin Bakhtiyar Khilji)[1] (இறப்பு: 1206), ஆப்கானித்தானில் பிறந்த துருக்கி இனத்தவர் ஆவார்.[2]தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் ஒரு பெரும் படையின் தலைவர் ஆவார். இவரது படையினர் நாளந்தா பல்கலைக்கழகத்தை எரித்து சிதைத்தனர்.[3]

விரைவான உண்மைகள் பக்தியார் கில்ஜி, பிறப்பு ...

எழுச்சி

ஆப்கானித்தானின் துருக்கிய படைத் தலைவரான பக்தியார் கில்ஜி, 1193ல் தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் ஒரு சிறு படைப்பிரிவுக்கு தளபதியாக இருந்தார்.

பின்னர் அயோத்தி நவாப், பக்தியார் கில்ஜிக்கு தற்கால மிர்சாப்பூரின் ஆளுநராக நியமித்தார். வலிமை மிக்கப் படைகளை திரட்டிக் கொண்டு, மிர்சாப்பூரின் அருகில் உள்ள பகுதிகளை கைப்பற்றினார்.

படையெடுப்புகள்

Thumb
பக்தியார் கில்ஜியால் தீயிட்டு எரிக்கப்பட்ட நாளந்தா பல்கலைகழகத்தின் சிதிலங்கள்
Thumb
பக்தியார் கில்ஜி படைகளால் கொல்லப்பட்ட பௌத்த பிக்குகள், ஆண்டு 1193

பக்தியார் கில்ஜி 1193ல், தற்கால பிகார் மாநிலத்தில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் விக்கிரமசீலாவின் கல்விக் கூடங்களை தீயிட்டு எரித்தார்.[4] Bakhtiyar Khilji.[5]

1203ல் பிகாரை கைப்பற்றிய பின்னர், வங்காளத்தை ஆண்ட சென் பேரரசர் இலக்குமன சென் மீது படையெடுத்து, அதன் தலைநகரான நவதீபத்தை கைப்பற்றினார்.[6] பின்னர் தற்கால மேற்கு வங்காளத்தின் தேவகோட், கௌர் போன்ற நகரங்களைக் கைப்பற்றினார்.[7]

Remove ads

திபெத் மீதான படையெடுப்பும், மறைவும்

பக்தியார் கில்ஜி, 1206ல் இந்தியாவையும், திபெத்தையும் இணைக்கும் பட்டுப் பாதையை கைப்பற்ற, ஆயிரக்கணக்கான போர் வீரர்களுடன், திபெத்தின் சும்பி பீடபூமி மீது போர் தொடுத்தார். போரில் திபெத்திய போர் வீரர்களுடன் தோற்ற பக்தியார் கில்ஜி, நூறு படை வீரர்களுடன் மட்டும் வங்காளத்தின் தேவகோட் நகரத்திற்கு திரும்பினார். பக்தியார் கில்ஜி, தேவகோட் நகரத்தில் தங்கியிருந்த போது, அலி மர்தன் எனும் வங்காள படைத் தலைவரால் கொலை செய்யப்பட்டார்.[8][9]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads