நிர்மலா சீதாராமன்
இந்திய அரசின் நிதியமைச்சர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman; பிறப்பு: 18 ஆகத்து 1959) இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவியில் உள்ளார்.[5] இப்பதவிக்கு முன்பு இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.[7]
Remove ads
கல்வி
நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மதுரையில் ஒரு தமிழ் ஐயங்கார் குடும்பத்தில்,[8] சாவித்திரி மற்றும் நாராயணன் சீதாராமனுக்கு மகளாகப் பிறந்தார். சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[9] நிர்மலா சீதாராமன் 1980-ல் திருச்சியிலுள்ள சீதாலச்சுமி இராமசாமி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[10][11][12]
Remove ads
வாழ்க்கை
நிர்மலாவின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.[13] நிர்மலா சீதாராமன், முனைவர் பரகலா பிரபாகர் என்பவரை மணந்தார். பிரபாகர், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரின் தகவல் தொடர்பு ஆலோசகராகப் பணியாற்றியவர்.[14][15][16] இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.[17][18]
பணி
நிர்மலா சீதாராமன் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராவார் (2003-2005). இவர் பாரதிய சனதா கட்சியின் ஆறு பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் குழுவில் ஒருவராவார்.
வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்
இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில், மே 26, 2014 அன்று நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மனோகர் பரிக்கர் முதல்வரான பின்னர் இவர் இந்தியப் பாதுக்காப்புத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.
நிதி அமைச்சர்
2019 மே 31 முதல் இந்திய மத்திய அரசு நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார் நிர்மலா சீதாராமன்.[19][20][21]
விருதுகளும் கௌரவங்களும்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இவருக்கு 2019-ல் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.[22] போர்ப்ஸ் இதழ் 2019ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் 34வது இடத்தை வழங்கியது.[23]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads