இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர்.
விரைவான உண்மைகள் {{{body}}} நிதி அமைச்சர், உறுப்பினர் ...
மூடு
விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பதவியில் உள்ளார்.
மேலதிகத் தகவல்கள் வ. எண், நிதியமைச்சர் ...
வ. எண் |
நிதியமைச்சர் |
காலவரை |
கல்வி |
1 |
லியாகத் அலி கான் | 1946-1947 (இடைப்பட்ட அரசு) | அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் |
2 |
ஆர். கே. சண்முகம் செட்டி | 1947-1949[1] | சென்னைப் பல்கலைக்கழகம் |
3 |
ஜான் மத்தாய் | 1949-1951 | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் |
4 |
சி. து. தேஷ்முக் | 1951-1957[2] | ஜீசஸ் கல்லூரி, கேம்பிரிச்சு |
5 |
டி. டி. கிருஷ்ணமாச்சாரி | 1957-1958 | சென்னைப் பல்கலைக்கழகம் |
6 |
ஜவஹர்லால் நேரு | 1958-1959 | டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்; மைய ஆலயம் |
7 |
மொரார்ஜி தேசாய் | 1959-1964 | மும்பை பல்கலைக்கழகம் |
8 |
டி. டி. கிருஷ்ணமாச்சாரி | 1964-1965 | சென்னைப் பல்கலைக்கழகம் |
9 |
சச்சிந்திர சவுத்ரி | 1965-1967 | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
10 |
மொரார்ஜி தேசாய் | 1967-1970 | மும்பை பல்கலைக்கழகம் |
11 |
இந்திரா காந்தி | 1970-1971 | விஸ்வபாரதி பல்கலைக்கழகம்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் |
12 |
ஒய். பி. சவாண் | 1971-1975 | புனே பல்கலைக்கழகம் |
13 |
சி. சுப்பிரமணியன் | 1975-1977 | சென்னைப் பல்கலைக்கழகம் |
14 |
மொரார்ஜி தேசாய் | 1977-1979 | மும்பை பல்கலைக்கழகம் |
15 |
சரண் சிங் | 1979-1980 | மீரட் பல்கலைக்கழகம் |
16 |
ரா. வெங்கட்ராமன் | 1980-1982 | சென்னைப் பல்கலைக்கழகம் |
17 |
பிரணாப் முக்கர்ஜி | 1982-1985 | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
18 |
வி. பி. சிங் | 1985-1987 | அலகாபாத் பல்கலைக்கழகம்;
புனே பல்கலைக்கழகம் |
19 |
எசு. பி. சவாண் | 1987-1989 | சென்னைப் பல்கலைக்கழகம்; உசுமானியா பல்கலைக்கழகம் |
20 |
மது தண்டவதே | 1989-1990 |
|
21 |
யஷ்வந்த் சின்கா | 1990-1991 | பாட்னா பல்கலைக்கழகம் |
22 |
மன்மோகன் சிங் | 1991-1996 | பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியுபீல்டு கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
23 |
ப. சிதம்பரம் | 1996-1998 | சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி |
24 |
யஷ்வந்த் சின்கா | 1998-2002 | பாட்னா பல்கலைக்கழகம் |
25 |
ஜஸ்வந்த் சிங் | 2002-2004 | இந்திய தேசிய பாதுகாப்புப் பயிற்சிப் பள்ளி |
26 |
ப. சிதம்பரம் | மே 2004 - நவம்பர் 2008 | சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி |
27 |
மன்மோகன் சிங் | திசம்பர் 2008 - ஜனவரி 2009 (பிரதமர் பொறுப்பிலிருந்து கூடுதலாக இப்பொறுப்பையும் கவனித்தார்) | பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நிப்பீல்டு கல்லூரி, ஆக்சுபோர்டு |
28 |
பிரணாப் முக்கர்ஜி | 24 சனவரி, 2009 - 26 ஜூன், 2012 (இடையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பிலிருந்து கொண்டு கூடுதலாக இப்பொறுப்பினை மேற்கொண்டார்) | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
29 |
மன்மோகன் சிங் | சூன் 26, 2012 - சூலை 31, 2012 முதல் (பிரணாப் முக்கர்ஜியின் விலகலால் பிரதமர் இப்பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்) | பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியூஃபீல்டு கல்லூரி, ஆக்சுபோர்டு |
30 |
ப. சிதம்பரம் | சூலை 31, 2012 - 26 மே 2014 | சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி |
31 |
அருண் ஜெட்லி | 30 மே 2019 வரை | தில்லி பல்கலைக்கழகம் |
32 |
நிா்மலா சீதாராமன் |
30 மே 2019 முதல் நிதியமைச்சராக உள்ளாா் |
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் |
மூடு