நீதானே எந்தன் பொன்வசந்தம்

From Wikipedia, the free encyclopedia

நீதானே எந்தன் பொன்வசந்தம்
Remove ads

நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெப்ரவரி 24, 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு நேரத்தில் ஒளிபரப்பான காதல் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஜீ மராத்தி தொலைகாட்சித் தொடரான 'துலா பஹ்ட் ரே' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

விரைவான உண்மைகள் நீதானே எந்தன் பொன்வசந்தம், வகை ...

இந்தத் தொடரில் தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ்[1] என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன்[2] என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த தொடர் 25 திசம்பர் 2021 அன்று 509 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதை சுருக்கம்

இந்த தொடரின் கதை 20 வயாதான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அனு என்ற பெண்ணும் 40 வயதான பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபருக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்பது தான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஜெய் ஆகாஷ்[3] - சூரிய பிரகாஷ்
    • 40 வயதுடைய ஒரு பணக்காரர்.
  • தர்சனா அசோகன் - அனு
    • 20 வயதுடைய ஒரு நடுத்தர வர்க்கப் பெண்.

துணை கதாபாத்திரம்

  • டேவிட் சோலொமொன் ராஜா - பங்கஜ்; சூர்யபிரகாஷின் செயலாளர் மற்றும் நண்பர்.
  • நிவாஷினி திவ்யா - மீரா; சூர்யபிரகாஷின் பி.ஏ.
  • சோனியா - புஷ்பா; அனுவின் தாய்
  • சாயிராம் - சுப்பு; அனுவின் தந்தை
  • சத்யப்ரியா - சாரதா; சூர்யபிரகாஷ் மற்றும் சந்திரபிரகாஷின் தாய்
  • கார்த்திக் சசிதரன் - சந்திர பிரகாஷ்; சூர்யபிரகாஷின் தம்பி
  • சுபிக்‌ஷா - மான்சி; சந்திரபிரகாஷின் மனைவி
  • ரிஷ்மிதா - ரம்யா; அனுவின் தோழி
  • பவித்ரா - ஸ்வப்னா; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர்
  • ராஜா வெற்றி பிரபு - தீனா; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர்
  • ஜெய் சீனிவாஸ் குமார் - நீல்; சூர்யபிரகாஷின் அலுவலக ஊழியர் மற்றும் சுரேந்தரின் கூட்டாளி (2020)
  • வெற்றி வேலன் - சுரேந்தர்; சூர்யபிரகாஷின் எதிரி (2020)
  • பானுமதி - பிந்து; சாரதாவின் உதவியாளர்
  • சரத் - கோபி; ஒரு சமையல்காரர்
  • கற்பகவல்லி - ரஞ்சினி; ரம்யாவின் தாய்
  • ராஜ் மித்ரன் - ரகுபதி; ரஞ்சினியின் சகோதரர்
  • ரவிவர்மன் - சம்பத்; ரகுபதியின் மகன் மற்றும் ரம்யாவின் உறவினர்
Remove ads

நடிகர்களின் தேர்வு

இது ஒரு வித்தியாசாமான காதல் கதை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடரில் ரோஜாக்கூட்டம், இனிது இனிது காதல் இனிது, அடடா என்ன அழகு போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவர் முதல் முறையாக சின்னத்திரையில் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக மாதிரி நடிகையான தர்சனா அசோகன் என்பவர் அனு என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமாகிறார்.

நேர அட்டவணை

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான தேதி, நாட்கள் ...

மறு தயாரிப்பு

  • 'துலா பஹ்ட் ரே' என்ற தொடரின் மறு தயாரிப்புகள்:
மேலதிகத் தகவல்கள் மொழி, தலைப்பு ...

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads