நூத்துபியப் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நூத்துபியப் பண்பாடு ( Natufian culture (/nəˈtuːfiən/[1]) பண்டைய அண்மை கிழக்கின் பிந்தை நடு கற்காலத்தில் லெவண்ட் பிரதேசத்தில் தற்கால இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் கிமு 12,000 முதல் 9,500 முடிய விளங்கிய ஒரு தொல்பொருள் பண்பாடு ஆகும்.[2][3][4] இது உலகின் முதல் பண்பாடு எனக்கருதப்படுகிறது. தற்கால எரிக்கோ நகரம் நூத்துப்பியான் பண்பாட்டு காலத்திலிருந்து தொடர்ந்து மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாகும். நூத்துப்பிய பண்பாட்டுக் களங்களில், உலகில் முதன்முதலில் வேளான்மை செய்த பகுதியாக அறியப்படுகிறது.[5] 14,500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் முதன் முதலாக ரொட்டி தயாரிக்கும் பகுதியாக நூத்துப்பிய பண்பாட்டுக் களங்களில் ஒன்றான, ஜோர்தானின் வடகிழக்கு பாலைவனப்பகுதியில் அமைந்த சுபய்யா (Shubayqa) தொல்லியல் மேடுகளின் அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.[6] மேலும் உலகின் தொன்மையான நூத்துப்பிய பண்பாட்டின் அரை-நாடோடி மக்கள் சமயச் சடங்குகளின் போது படையலுக்குப் பயன்படுத்திய, 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குடுவையை இஸ்ரேல் நாட்டின் கடற்கரை நகரமான ஹைபாவின் கார்மேல் மலையில் உள்ள ரக்கேபெட் குகையில் கண்டெடுக்கப்பட்து.[7][8]

பொதுவாக நூத்துப்பியப் பண்பாட்டு மக்கள் காட்டுத் தானியங்களையும், காட்டுச் சிறுமான்களையும் உணவாகக் கொண்டனர்.[9] தொல்லியல் அறிஞர் ஜி. கிறிஸ்டி டர்னரின் கூற்றுப்படி, லெவண்ட் பகுதியில் வாழும் தற்கால செமித்திய மொழிகள் பேசும் மக்களுக்கும், நூத்துப்பியப் பண்பாட்டு மக்களுக்கும் தொல்லியல் மற்றும் மானிடவியல் பண்புகள் அடிப்படையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக கருதுகிறார்.[10] (பிந்தைய புதிய கற்காலம் முதல் வெண்கலக் காலம்) வரையிலான [[[தொல்பொருளியல்]] பிற்காலத்தில் (கற்காலத்திலிருந்து வெண்கலக் காலம் வரை) லெவாண்டின்கள் முதன்மையாக நேட்டூபியர்களிடமிருந்து பெறப்பட்டவை என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
செப்புக் காலத்திய அனதோலிய மக்கள் மற்றும் லெவண்ட் மக்கள் நூத்துப்பிய பண்பாட்டின் தாக்கங்களின் கலவையுடன் விளங்கினர் என தொல்பொருள் அறிஞர்கள் கருதுகின்றனர்.[11] டோரதி காரோடு எனும் தொல்லியல் அறினர் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதேயா மலையில் உள்ள சுக்பா குகையின் அகழ்வாய்வுகளின் அடிப்படையில் நூத்துப்பியப் பண்பாடு என்ற பெயர் வழங்கப்பட்டது எனக் கூறுகிறார்.
Remove ads
தொல்லியல் அகழாய்வுகள்

பிரித்தானிய தொல்லியல் அறிஞர் தோரதி காரட் என்பவர் ஜோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள யூதேயா மலையில் உள்ள சுக்பா குகையை 1928-இல் அகழ்வாய்வு செய்த போது நூத்துப்பிய பண்பாட்டின் தொல்லியல் எச்சங்களைக் கண்டறிந்தார்.[12] பிந்தைய கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்குரிய இடைப்பொதியில் (sandwich) குறுனிக்கல் காலத்திற்குரிய குறிகளுடன் கண்டுபிடித்தார். பின்னர் இந்த இடப்பொதியை இடைக் கற்காலத்திற்கு உரியது என கண்டறிந்தார்.
பின்னர் அதே போன்ற இடைப்பொதிகளை எல் - வாத் டெரஸ், கார்மேல் மலை, வாடியன் நூத்துப் போன்ற தொல்லியல் களங்களில் தோரதி காரேட் கண்டுபிடித்தார். 1931-இல் தோரதி காரேட் கல் கத்தியை கண்டுபிடித்ததன் மூலம் அப்பகுதிகளில் வேளாண்மைத் தொழில் துவக்க நிலையில் இருந்ததை அறிந்தார்.
Remove ads
காலக் கணிப்பு

கரிமக் காலக்கணிப்பின் படி பண்டைய அண்மைக் கிழக்கின் லெவண்ட் பகுதியில் நூத்துபியப் பண்பாடு கிமு 12,500 முதல் கிமு 9,500 வரை விளங்கியதாக அறியப்படுகிறது.[13]
நூத்துபியப் பண்பாட்டு காலத்தை கிமு 12,800 முதல் 10,800 வரை முதல் பகுதியாகவும், கிமு 10,800 முதல் கிமு 9,500 வரை இரண்டாம் பகுதியாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பகுக்கின்றனர். நூத்துபியப் பண்பாட்டுக் காலத்தின் போது நிலங்கள் தற்போது இருப்பது போன்று வறண்டதாக இன்றி காடுகளுடன் செழிமையாக இருந்தது என அறியப்படுகிறது.[14]
Remove ads
தொடர்புடைய பண்பாடுகள்
பண்டைய அண்மை கிழக்கின் நூத்துபியப் பண்பாட்டைப் போன்று சினாய் தீபகற்பத்தில் முசாபியான் பண்பாடு மற்றும் கேப்ரான் பண்பாடு விளங்கியது.
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் நூத்துப்பியப் பண்பாட்டுத் தொல்லியற் களங்களில் தானியங்கள் அரைக்கும் அம்மி, உரல், குழவி மற்றும் ஆட்டுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகள்



லெபனான், இஸ்ரேல், சினாய் தீபகற்பத்தின் மலைப்பகுதிகள் மற்றும் சிரிய-அரேபியப் பாலைவனப் பகுதிகளில் நூத்துபியப் பண்பாட்டின் மக்களின் குடியிருப்புகள் காணப்பட்டது. இப்பண்பாட்டின் குடியிருப்புகளின் அடித்தளங்கள் கற்களாலும், மேற்கூரைகள் மரத்தினாலும் ஆனது. ஆனால் களிமண் செங்கற்கள் காணப்படவில்லை. எனவே இப்பண்பாட்டுக் காலம் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) என அறியப்படுகிறது.
கல்லறைகள்


நூத்துப்பியக் கல்லறைகளில் சங்குகள், செம்மானின் பற்கள், எலும்புகள், காது வளையங்கள், இடுப்பணிகள், கழுத்தணிகள் மற்றும் வித்தியாசமான கற்கள் கிடைத்துள்ளது.
2008-இல் வடக்கு இஸ்ரேலின் ஹிலசான் டாச்தித் எனும் குகையில் கிமு 12,400 - 12,000 இடைப்பட்ட காலத்திய நூத்துபியப் பண்பாட்டின் சவக்குழியில் மந்திரம் மற்றும் மருத்துவம் செய்த பெண்னின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.[15] [16][17] மேலும் இச்சவக்குழியின் பெண் எலும்புக் கூடு அருகே 3 எருமைகள், 86 ஆமைகள், சிறுத்தை மற்றும் கழுகுகளின் எலும்புக்கூடுகள் இருந்தது.[18][19]
Remove ads
தொல்லியல் எச்சங்கள்



நூத்துப்பிய பண்பாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடும் சமூகமாக வாழ்ந்தனர். காட்டுத் தானியங்களை சேகரித்து உண்டனர். இம்மக்கள் சிறப்பு உணவாக சிறுமான்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடைத்துள்ளது. மேலும் ஜோர்தான் சமவெளியின் புல்வெளிப் பகுதிகளில் எருதுகள், காட்டுப் பன்றிகளை வேட்டையாடினர்.[20]
Remove ads
நூத்துபிய பண்பாட்டின் மொழி

நூத்துபிய மக்கள் வட ஆப்பிரிக்க - ஆசிய மொழிகளின் கலவையான மொழியை பேசினர் என தொல்லியல் அறிஞர் விட்டலி செவொரொஸ்கின் கருதுகிறார்.[21]
அலெக்சாண்டர் மிலிதரேவ் என்பவர் நூத்துபிய மக்கள் ஆதி ஆப்பிரிக்க-ஆசிய மொழியைப் பேசினர் எனக்கருதுகிறார்.[22][23]
நூத்துபியப் பண்பாட்டின் தொல்லியல் களங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads