நேபாள அரசு
நேபாளத்தின் சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேபாள அரசு (Government of Nepal) (நேபாளி: नेपाल सरकार), நேபாளத்தின் உயர் நிர்வாக அமைப்பும், மைய அரசாகும்.
நேபாள இராச்சியத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் நேபாள அரசை மன்னரின் மாட்சிமை வாய்ந்த அரசு என அழைக்கப்பட்டது.(நேபாளி: श्री ५ को सरकार).[1]
நேபாள நாட்டின் அதிபராக குடியரசுத் தலைவரும், நேபாள அரசின் நிர்வாகத் தலைவராக பிரதம அமைச்சரும் செயல்படுகின்றனர்.
நேபாள நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரைகளின் படி, குடியரசுத் தலைவர் செயலாற்றுகிறார்.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் சடங்கு பூர்வமானதே.
நேபாளத்தின் அரசியலமைப்புக்குட்பட்ட அமைப்புகளின் தலைவர்களை, அமைச்சரவையின் பரிந்துரைகளின் படியே, குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். விதிவிலக்காக, நேபாள அரசின் தலைமை வழக்கறிஞரை மட்டும் பிரதம அமைச்சரே நியமிப்பார்.
Remove ads
வரலாறு
1768ல் ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா, ஒன்றுபட்ட நேபாள இராச்சியத்தை நிறுவினார்.
பின்னர் மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனை வழங்க மூல்-கஜி எனும் பதவிப் பெயரில் பிரதம அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.
நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா 1806ல் முக்தியார் எனும் பிரதம அமைச்சர் பதவியை உருவாக்கினார். நாட்டின் அன்றாட நிர்வாகத்தின் தலைமை அலுவலராக முக்தியார் செயல்பட்டார்.[2][3][4]
15 செப்டம்பர் 1846 முதல் ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா, நேபாள மன்னர்களை கைப்பாவை பொம்மை அரசர்களாகக் கொண்டு, அவரது வழித்தோன்றல்கள், நேபாள பிரதம அமைச்சர்களாக 1951 முடிய பதவி வகித்தனர்.
ராணா வம்ச பரம்பரை பிரதம அமைச்சர்களுக்குப் பின்
- 1951 முதல் 1960 வரை நேபாள முடியாட்சிக்குட்பட்ட பிரதம அமைச்சர்கள் நாட்டின் நிர்வாகத்தை மேற்கொண்டனர்.
- 1960 முதல் 1990 முடிய நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறையில் பிரதம அமைச்சர்கள் செயல்பட்டனர்.
- 1990 முதல் 2008 முடிய முடியாட்சிக்கு உட்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் பிரதம அமைச்சர்கள் செயல்பட்டனர்.
- 2008 முதல் நேபாளத்தில் மன்னராட்சி முறை நீக்கப்பட்டு, நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு நிறுவப்பட்டது. நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ் மற்றும் முதல் பிரதம அமைச்சராக கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Remove ads
நேபாள அரசின் தலைவர்கள்
- குடியரசுத் தலைவர்: வித்யா தேவி பண்டாரி
- துணை குடியரசுத் தலைவர்: நந்த கிசோர் பூன்
நிர்வாகத் தலைவர்கள்
- பிரதம அமைச்சர் : கட்க பிரசாத் சர்மா ஒளி
- தலைமை அரசுச் செயலாளர் : லோக் தர்சன் ரெக்மி
- துறைகளின் அரசுச் செயலாளர்கள்
நாடாளுமன்ற அவைத் தலைவர்கள்
- பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர்: கிருஷ்ண பகதூர் மகாரா
- நேபாள தேசிய சபையின் தலைவர்
நீதித் துறை
- நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்: தீபக் ராஜ் ஜோஷி (தற்காலிகம்)[5]
நேபாள அமைச்சரவை
Remove ads
அரசியலமைப்புச் சட்டத்தின் அமைப்புகள்
Remove ads
நேபாள பாதுகாப்புத் துறைகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads