பகேல்கண்ட் முகமை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பகேல்கண்ட் முகமை (Bagelkhand Agency), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் பகேல்கண்ட் பிரதேசத்தின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1871-ஆம் ஆண்டு முதல் 1933-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.
1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பகேல்கண்ட் முகமையின் மொத்த பரப்பளவு 14,323 சதுர மைல்கள் (37,100 km2) மற்றும் மக்கள் தொகை 15,55,024 ஆகும். கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால், 1891-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பை விட 1901-ஆம் ஆண்டில் மக்கள் 11% வீழ்ச்சி கண்டது. 1933-ஆம் ஆண்டில் பகேல்கண்ட் முகமையை புந்தேல்கண்ட் முகமையுடன் இணைக்கப்பட்டது.[1]
1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் பகேல்கண்ட் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று விந்தியப் பிரதேசம், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
பகேல்கண்ட் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்களும், ஜமீன்களும்
சுதேச சமஸ்தானங்கள்
- ரேவா சமஸ்தானம்
- மைகார் சமஸ்தானம்
- நாகோட் சமஸ்தானம்
- சோகாவல் சமஸ்தானம்
- ஜசோ சமஸ்தானம்
- கோத்தி சமஸ்தானம்
- பரௌந்தா சமஸ்தானம்
- கலிஞ்சர் சமஸ்தானம்
- பல்தேவ் சமஸ்தானம்
- காம்தா-ரஜௌலா சமஸ்தானம்
- தரோன் சமஸ்தானம்
- பஹ்ரா சமஸ்தானம்
- பைசௌந்தா சமஸ்தானம் [2]
ஜமீன்தார்கள்
- சோகாபூர்
- ஷாப்பூர்
- ஜெயித்பூர்
- அமர்கண்டக்
- நிக்வானி
- அனுப்பூர்
- வைகுந்த்பூர்
- சந்தியா
- தன்காவான்
- சிங்பனா
இதனையும் காண்க
- பகேல்கண்ட்
- புந்தேல்கண்ட்
- மத்திய இந்திய முகமை
- கிழக்கிந்திய முகமை
- விந்தியப் பிரதேசம்
- மத்திய பாரதம்
- பஞ்சாப் அரசுகள் முகமை
- இராஜபுதனம் முகமை
- கத்தியவார் முகமை
- சூரத் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads