பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கு நூல்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பண்டைய எகிப்தியர்களின் இறப்புச் சடங்கு நூல் (Ancient Egyptian funerary texts) பண்டைய எகிப்தியர்களின் இறந்து போன பார்வோன்கள் மற்றும் அவர் தம் இராணிகளின் மம்மிகளின் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கு நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் செய்யும் முறைகளை குறிக்கும் நூல் ஆகும்.[1] பண்டைய எகிப்தியர்கள் இறப்ப்பிறகு பிந்தைய வாழ்கையில் நம்பிக்கையுடையவர்கள்[2]. எனவே இறப்பிற்கு பிற்பட்ட வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட நபரின் ஆவி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது.

பழைய எகிப்து இராச்சிய காலத்தில் உருவான பிரமிடு நூல்கள் மற்றும் மத்திய கால எகிப்திய இராச்சிய காலத்தில் உருவான சவப்பெட்டி நூல் மற்றும் புது எகிப்து இராச்சியத்தில் நடைமுறையில் இருந்த இறந்தோர் நூல் போன்ற பல வகையான நூல்களிலிருந்து பண்டைய பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் அறியப்படுகிறது.

Remove ads

பழைய எகிப்து இராச்சியம்

துவக்கத்தில் பழைய எகிப்து இராச்சிய (கிமு 2686–கிமு 2181) காலத்தில் இறப்புச் சடங்கு நூலின் படி, இறந்த எகிப்திய மன்னர்களின் மம்மிகளுக்கு மட்டும் இறப்புச் சடங்குகள் செய்யப்பட்டது. பழைய எகிப்து இராச்சியத்தின் முடிவின் போது, இறந்த இராணிகளின் மம்மிகளுக்கும் இறுதிச் சடங்கு நூலின் படி, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

எகிப்தின் மத்தியகால இராச்சியம்

எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் (கிமு 2181 - கிமு 2055) போது மம்மியின் சவப்பெட்டி மீது இறுதிச் சடங்கிற்கான உரைகள் எழுதப்பட்டது. இந்த சவப்பெட்டி மீதான உரைகளில் பாதி அளவு பிரமிடு நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.[3]

புது எகிப்து இராச்சியம்

புது எகிப்திய இராச்சிய காலத்தில் (கிமு 1550 – கிமு 1077) மம்மிகளின் இறுதிச் சடங்குகிற்காக கீழ் கண்ட நூல்கள் கொண்டிருந்தது.

பிந்தைய புது எகிப்து இராச்சிய காலத்தில்

  • வான் நூல் (Books of the Sky)

மன்னர்களின் சமவெளியில் உள்ள நான்காம் ராமேசஸ் காலம் முதல் கல்லறை கூரைச் சுவரில் வான் நூலின் உரைகள் எழுதப்பட்டிருந்தது. அமர்னா காலத்திற்கு[7] பின்னர் புதிய இறப்புச் சடங்கு நூல்களின் படி மம்மிகள் அடக்கம் செய்யப்பட்டது.[8]பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தில் (கிமு 664 - கிமு 332) நூத் எனும் பெண் ஆகாயக் கடவுளை இறப்புச் சடங்குகளின் மையமாக விளங்கியது. நூத் பெண் கடவுள் சூரியனின் இரவு நேர பயணத்தை அவளது உடலுக்குள் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நூத் பெண் கடவுள் காலையில் சூரியனைப் புத்துயிர் பெறச் செய்கிறாள்.

  • நூத் நூல் (Book of Nut)
  • பகலின் நூல் (Book of the Day)
  • இரவின் நூல் (Book of the Night)
  • சொர்க்கப் பசு நூல் (Book of the Heavenly Cow)

பிந்தைய கால எகிப்திய இராச்சியம்

பிந்தைய கால எகிப்திய இராச்சிய (கிமு 664 - கிமு 332) காலத்த்தில்:

  • மூச்சு விடல் நூல் (Books of Breathing)

தாலமி வம்சம்

  • பரலோகப் பயண நூல் (Book of Traversing Eternity)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads