பத்ராவதி, கர்நாடகா

From Wikipedia, the free encyclopedia

பத்ராவதி, கர்நாடகாmap
Remove ads

பத்ராவதி (Bhadravati) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில்துறை நகரமும், ஒரு வட்டமுமாகும். இந்நகரம் மாநில தலைநகரான பெங்களூரிலிருந்து சுமார் 255 கிலோமீட்டர் (158 மைல்) தூரத்திலும், மாவட்ட தலைமையகமான சிவமோகாவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இந்த நகரம் 67.0536 சதுர கிலோமீட்டர் (25.8895 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும், 2011 இல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 151,102 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் பத்ராவதி இரும்பு நகரம், Country ...
Remove ads

வரலாறு

நகரத்தின் ஊடாக பாயும் பத்ரா நதியிலிருந்து பத்ராவதி அதன் பெயரைப் பெற்றது. இது முன்னர் பென்கிபுரா (அல்லது வெங்கிபுரா) என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஆங்கிலத்தில் "நெருப்பு நகரம்" எனப் பொருள்படும்.[2] மேலும் முன்னர் 'பெங்கி பட்டணம்' என்றும் அழைக்கப்பட்டது. போசளர்கள் இந்த நகரத்தை ஆண்டார். "ஹலதமாதேவியும், அந்தரகட்டமாதேவியும் கடந்த காலத்திலிருந்து நகரத்தை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. இவர்களுக்கு புனித கோவில்கள் நகரத்தில் இன்னும் உள்ளன.

கெம்மண்ணுகுண்டி மலை வாழிடத்திலிருந்து இரும்புத் தாதுவும், பத்ரா ஆற்றிலிருந்து வரும் நீரும் 1918 ஆம் ஆண்டில் மைசூர் இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் என அழைக்கப்படும் இரும்பு ஆலை நிறுவ உதவியது. 1936 ஆம் ஆண்டில் மைசூர் காகித ஆலை நிறுவனம் தனது காகித உற்பத்தி நிறுவனத்தை நிறுவியதன் மூலம் ஒரு தொழில்துறை நகரமாக பத்ராவதியின் நற்பெயர் மேலும் மேம்படுத்தப்பட்டது.

Remove ads

புள்ளிவிவரங்கள்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பத்ராவதியின் மக்கள் தொகை 160,392 ஆகும். இதில் ஆண்கள் 51%, பெண்கள் 49%. பத்ராவதியின் சராசரி கல்வியறிவு விகிதம் 86.36%, இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; ஆண்களில் 91.39% மற்றும் பெண்கள் கல்வியறிவு 81.46%.[4] மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்கள்.[5] இந்த நகரத்தில் பேசப்படும் முக்கிய மொழி கன்னடம் ஆகும்.

நிலவியல்

அமைவிடம்

பத்ராவதி கர்நாடக மாநிலத்தின் மத்திய பகுதியில், சிவமோகா மாவட்டத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. பத்ராவதி நகரத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஒருங்கிணைப்புகள் 13.840 ° வடக்கு 75.702 கிழக்கு. பத்ராவதி கடல் மட்டத்திலிருந்து 597 மீட்டர் (1,959 அடி) உயரத்தில் உள்ளது.

பத்ரா ஆறு பத்ரா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து பத்ராவதி நகரம் வழியாக பாய்கிறது. இந்த நதியில் பல முதலை (பாதிக்கப்படக்கூடிய) இனங்கள் உள்ளன. பத்ராவதி மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் ( மலைநாடு) அரேமலேநாடு பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது.

பத்ராவதி வட்டத்தின் மொத்த பரப்பளவு 675.08 சதுர கிலோமீட்டர் (260.65 சதுர மைல்) ஆகும். இங்கு 338,611 மக்கள் தொகையும் சதுர கிலோமீட்டருக்கு 501.56 மக்கள் அடர்த்தியும் (1,299.0 / சதுர மைல்) இருக்கிறது. இது மற்ற ஐந்து வட்டங்களின் எல்லையாகும், மேற்கில் சிவமோகா வட்டம், வடக்கே ஹொன்னாலி வட்டம், கிழக்கே சென்னகிரி வட்டம், தென்கிழக்கில் தாரிகேர் வட்டம், தென்மேற்கில் நரசிம்மராஜபுரா வட்டம் அமைந்துள்ளது.

காலநிலை

கோடையில் சராசரி வெப்பநிலை 25 °C (77 °F) முதல் 37 °C (99 °F) வரை இருக்கும். குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை 20 °C (68 °F) முதல் 30 °C (86 °F) வரை இருக்கும்.[6] நகரில் ஆண்டு மழைப்பொழிவு சுமார் 950 மில்லிமீட்டர் (37 அங்குலம்) ஆகும்.[7]

போக்குவரத்து

சாலை

ஒரு தேசிய நெடுஞ்சாலைகள் இந்நகரம் வழியாக செல்கின்றன; தே.நெ.எண் -69 (முன்னர் தே.நெ.எண் -206); இரண்டு மாநில நெடுஞ்சாலைகளும் நகரத்தின் வழியாக செல்கின்றன. பெங்களூரிலிருந்து சிவமோகா செல்லும் பேருந்துகள் பத்ராவதியில் நின்று பயணத்தை முடிக்க ஆறு மணி நேரம் ஆகும்.

ரயில்

சிவமொகா - பெங்களூர் இரயில், பிரூர் - சிவமோகா ரயில், மைசூரு - சிவமோகா ரயில் அனைத்தும் பத்ராவதி வழியாக செல்கின்றன. இது பெங்களூரு நகரத்துடன் இரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[8]

விமான நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம் ஹூப்ளியில் உள்ளது. இது பத்ராவதியிலிருந்து 170 கிலோமீட்டர் (110 மைல்) தொலைவில் உள்ளது. அடுத்த விமான நிலையம் பத்ராவதியிலிருந்து 198 கிலோமீட்டர் (123 மைல்) தொலைவில் மங்களூரில் உள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 275 கிலோமீட்டர் (171 மைல்) தொலைவில் உள்ளது. சோகானே அருகே சிவமோகாவில் மற்றொரு விமான நிலையம் கட்டுமானத்தில் உள்ளது.[9]

Remove ads

பொருளாதாரம்

பத்ராவதி நகரம் இரண்டு முக்கிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது: விசுவேசுவரைய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலையும், மைசூர் காகித ஆலையும் சர் எம். விசுவேசுவரைய்யாவால் தொடங்கப்பட்டது.

சுற்றுலா இடங்கள்

பத்ராவதி இரண்டு மலைநாடு மாவட்டங்களான சிவமோகா மற்றும் சிக்மகளூரின் எல்லையில் உள்ளது . நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள்;

1. இலட்சுமி நரசிம்மர் கோயில் : நகரின் மையத்தில் அமைந்துள்ள போசளர் கட்டிடக்கலையில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் .

2. பத்ரா அணை : பத்ரா அணை நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பத்ரா ஆற்றுத் திட்டத்தில் அமைந்துள்ளது.

3. பத்ரா வனவிலங்கு சரணாலயம் : இது பத்ராவதிக்கு தெற்கே 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புலிகளை க்காக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது

4. கோண்டி : கோண்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் முக்கிய சுற்றுலா தலமாக ஒரு தடுப்பணை உள்ளது.

5. கெஞ்சம்மண்ணா குடா மற்றும் கங்கூர் : மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மழைக்காலத்தின் முக்கிய சுற்றுலா தலமாகும்.

Remove ads

விளையாட்டு

விசுவேசுவரைய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலை நிறுவனத்தின் விளையாட்டு மைதானம் பத்ராவதியில் அமைந்துள்ளது. 1960 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரங்கம் 25,000 பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. கர்நாடகா அணி இரண்டு சந்தர்ப்பங்களில் ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளை இங்கு விளையாடியுள்ளது.[10]

குறிப்பிடத்தக்க நபர்கள்

விளையாட்டு:

பொழுதுபோக்கு:

  • பாரதி விஷ்ணுவர்தன் ,
  • கன்னட திரையுலகில் நடிகரான தொட்டண்ணா ஆரம்பத்தில் விசுவேசுவரைய்யா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தில் பணிபுரிந்தார்
  • எஸ்.நாராயணன்., கன்னட திரையுலகின் நடிகரும் திரைப்பட இயக்குநருமாவார்.
  • போலந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாடல், அழகுப் போட்டி மற்றும் மிஸ் சூப்பர்நேஷனல் 2014 வெற்றியாளரான ஆஷா பட்
  • கன்னட திரையுலகில் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரு, இசை இயக்குனருமான பி.அஜனீஷ் லோக்நாத்
  • அர்பிதா வேணு], கன்னட திரையுலகில் பின்னணிப் பாடகி [11]

தொழில்நுட்பம்:

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு செயற்கைக்கோள் மையத்தில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைத் திட்டத்தின் துணை திட்ட மேலாளர் பன்னிஹட்டி பரமேசுவரப்ப தாக்சாயனி .
  • சந்தீப் சேனன்],[12] பைபாக்ஸ் ஆய்வகங்களின்] நிறுவனர், கண்டுபிடிப்பாளர், பொதுப் பேச்சாளர்.[13]
  • கிரண் மைசூர் [14], இந்தியா-யப்பான் எல்லை தாண்டிய துணிகர முதலீட்டாளர் மற்றும் போர்ப்ஸ் ஆசியா 30 வயதுக்குட்பட்ட விருது பெற்றவர்.[15]
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads