பாக்கர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

பாக்கர் மாவட்டம்map
Remove ads

பாக்கர் மாவட்டம் (Bhakkar District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாப் மாகாணத்தின் மேற்கில் அமைந்த பாக்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பாக்கர் நகரம் ஆகும். பாக்கர் நகரம் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 379 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்து]க்கு தென்மேற்கே 393 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தால் பாலைவனத்தில் அமைந்துள்ளது.[4]

விரைவான உண்மைகள் பாக்கர் மாவட்டம் بهكّر, நாடு ...
Remove ads

மாவட்ட எல்லைகள்

பாக்கர் மாவட்டத்தின் தெற்கில் லய்யா மாவட்டம், தென்கிழக்கில் ஜாங் மாவட்டம், மேற்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், வடக்கில் மியான்வாலி மாவட்டம், வடகிழக்கில் குசாப் மாவட்டம் மற்றும் கிழக்கில் ஜாங் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 313,311 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 19,57,470 ஆகும் . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 108 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 55.68% ஆகும்.[5][6]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 593,924 (30.35%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 352,434 (18.00%) மக்கள் வாழ்கின்றனர்.[5]

சமயங்கள்

இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 19,50,820 மக்களும், பிற சமயங்களை 6,650 மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]

மொழிகள்

இம்மாவட்டத்தில் சராய்கி மொழியை 79.42%, பஞ்சாபி மொழியை 9.73% மக்களும், உருது மொழியை 7.5%, பஷ்தூ மொழியை 2.41% மற்றும் இதர மொழிகளை 1.94% மக்கள் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[9]

Thumb
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்
Remove ads

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் 4 வருவாய் வட்டங்களாகவும்[10], 64 ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் வருவாய் வட்டம், பரப்பளவு (km²) ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads