மியான்வாலி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மியான்வாலி மாவட்டம் (Mianwali District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் மியான்வாலி நகரம் ஆகும். மியான்வாலி நகரமானது பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்கிழக்கே 320 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 224 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
Remove ads
மாவட்ட எல்லைகள்
மியான்வாலி மாவட்டத்தின் வடக்கில் அட்டோக் மாவட்டம், வடமேற்கிலும், மேற்கிலும் கைபர் பக்துன்வா மாகாணம், வடகிழக்கில் தலகாங் மாவட்டம், தெற்கில் பாக்கர் மாவட்டம் மற்றும் கிழக்கில் குசாப் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
புவியியல்
5,840 சதுர கிலோமீட்டர்கள் (2,250 sq mi) பரப்பளவு கொண்ட மியான்வாலி மாவட்டம் போத்தோகர் பீடபூமியில் அமைந்துள்ளது.[3]மேலும் இம்மாவட்டத்தில் உப்பு மலைத்தொடர்கள் அமைந்துள்ளது.[4]இம்மாவட்டத்தின் தெற்கில் தால் பாலைவனம் உள்ளது.[5] சிந்து ஆற்றின் தால் கால்வாய் இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 296,339 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,798,268 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு ஆண்கள் 104.32 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 62.87% ஆகும்.[7][8]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 454,517 (25.31%) ஆக உள்ளனர்.[9]நகர்புறங்களில் 363,453 (20.21%) வாழ்கின்றனர்.[7]
மொழிகள்
இம்மாவட்டத்தில் சராய்கி மொழியை 73.69% மக்களும், பஷ்தூ மொழியை 11.35% மக்களும், பஞ்சாபி மொழியை 7.79% மக்களும், இந்த்கோ மொழியை 3.5% மக்களும், உருது மொழியை 3.15% மக்கள் தாய் மொழியாக பேசுகின்றனர்.[10]
சமயங்கள்
இம்மாவட்ட மக்கள் தொகையில் 99.32% மக்கள் இசுலாம் சமயத்தையும், 0.68% மக்கள் பிற சமயங்களைப் பின்பற்றுகின்றனர். [11]

மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 3 வருவாய் வட்டங்களும், 7 நகராட்சிகளும், 51 ஒன்றியக் குழுக்களும் கொண்டது.[12][13]
தட்ப வெப்பம்
Remove ads
படக்காட்சிகள்
- மியான்வாலியில் உப்பு மலைத்தொடர் மற்றும் நமல் ஏரி
- மியான்வாலியில் தால் கால்வாய்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads