பிரகத்ரத வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரகத்ரத வம்சம் அல்லது மகாரத வம்சம் (Brihadratha or Maharatha) (சமக்கிருதம்: बृहद्रथ) பரத கண்டத்தின் வடக்கில் அமைந்த மகத நாட்டை ஆண்ட முதல் வம்சம் ஆகும். பிரகத்ரதன் என்பவர் இவ்வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். மகாபாரதம் மற்றும் புராணங்களின் படி, மகத மன்னர் உபரிச்சர வசுவின் ஐந்து மகன்களில் மூத்தவர் பிரகத்ரதன் எனும் ஜராசந்தன் ஆவார்.[1]பிரகத்ரதன் எனும் மன்னரின் பெயர் ரிக் வேதம் (I.36.18, X.49.6) காணப்படுகிறது.[2]. பிரகத்ரத வம்சத்தின் வேறு பெயர் ரவானி வம்சம் ஆகும். வட மொழியில் பிரகத்ரதன் என்பதற்கு பெரிய தேர்ப்படைத் தலைவர் எனும் மகாரதன் என்று பொருளாகும்.
Remove ads
வாழ்க்கை
பிரகத்ரதன் எனும் ஜராசந்தன், மகதத்தில் தன் அரச வம்சத்தை நிறுவினார். இவ்வம்சத்தின் இறுதி மன்னர் ரிபுன்யஜெயன் ஆவார். கிமு ஆறாம் நூற்றாண்டில் ரிபுன்யஜெயன் தனது அமைச்ச்ரால் கொல்லப்பட்டார்.[3] இத்துடன் பிரகத்ரத வம்சம் முடிவுற்றது.
ஜராசந்தன் குறித்தான செய்திகள் மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தில் உள்ளது. கிருஷ்ணரின் தாய்மாமான கம்சனின் மாமனார் ஜராசந்தன் ஆவார். கம்சனை கிருஷ்ணன் கொன்றதால், ஜராசந்தன், கிருஷ்ணனை மதுராவிலிருந்து துவாரகைக்கு விரட்டியடித்தார். பின்னாட்களில் கிருஷ்ணன் வீமன்க் கொண்டு ஜராசந்தனை மற்போரில் கொல்ல உதவினார்.
சில புராணங்கள் ஜராசந்தனின் இறப்பிற்குப் பிறகு அவரது சகோதரி அம்நா என்பவர் மகத நாட்டை ஆண்டார் எனக்கூறுகிறது. அக்னி புராணத்தின் படி, ஜராசந்தனுக்குப் பிறகு அவரது மகன் சாம்பவன் மகத நாட்டை ஆண்டார் எனக்கூறுகிறது[4] சில புராணங்கள் ஜராசந்தனுக்குப் பிறகு மகத நாட்டை ஆட்சி செய்த சகாதேவன் என்பவர் குருச்சேத்திரப் போரில் பாண்டவர் சார்பாக, கௌரவர்களுக்கு எதிராகப் போராடி மாண்டார் என சில புராணங்கள் கூறுகிறது.[1]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads