பிரதாப் சந்திர சாரங்கி

From Wikipedia, the free encyclopedia

பிரதாப் சந்திர சாரங்கி
Remove ads

பிரதாப் சந்திர சாரங்கி (ஆங்கிலம்: Pratap Chandra Sarangi) (பிறப்பு: 4 ஜன 1955), என்பவர் ஒடிசா பாலேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒடிசா சட்டமன்றத்தில் 2004 மற்றும் 2009 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீள்கிரி தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார்.[2] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[3] மீண்டும் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் அதே பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டு 12956 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த ரபீந்திர குமார் ஜெனாவை வென்றார்.[4] பின்னர் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் கட்சியின் லேகாசிறீ சமாந்சிந்கார் என்பவரை 1,47,156 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

விரைவான உண்மைகள் பிரதாப் சந்திர சாரங்கி, நாடாளுமன்ற உறுப்பினர் பாலேஸ்வர் ...
Remove ads

இந்திய அரசின் இணையமைச்சராக

இவர் 31 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு & மீன் வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5]

இளமைக் காலமும் கல்வியும்

1955 ஜனவரி மாதம் நான்காம் தேதி பாலேஸ்வர் மாவட்ட கோபிநாதபூரில் பிரதாப் சாரங்கி ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். 1975 இல் உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பாலேஸ்வர் பகீர் மோகன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[6].

சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் சன்னியாசம் பெறவிரும்பினார். ஆனால் இவரின் தாயாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ண மடம் இவரைத் திருப்பி அனுப்பியது. அதன்பின்னர் கிராமத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறார்.[7]

Remove ads

சமூகச் செயல்பாடு

பாலேஸ்வர் மற்றும் மயூர்பஞ்சு மாவட்டங்களிலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் சமர் கரா கேந்திரா என்ற பெயரில் பல பள்ளிகளைத் திறந்துள்ளார்.[8]

சர்ச்சைகள்

அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் சாவின் நாடாளுமன்ற உரை இருந்ததாகக் கூறி 19 திசம்பர் 2024 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த முயன்றன.[9] [10] இதனை தடுக்கும் விதமாக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் போராட்டம் நடத்ததாகவும் இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பிரதாப் சந்திர சாரங்கியை எதிர்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தள்ளியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.[11] [12]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads