பிர்பூம் மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிர்பூம் மாவட்டம் (Birbhum district) (Bengali: বীরভূম জেলা) (Pron: biːrbʰuːm) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் சியுரி நகரத்தில் அமைந்துள்ளது.[1][2] இரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய உலகப் புகழ் வாய்ந்த விஸ்வபாரதி பல்கலைக்கழகம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ளது.[3]



Remove ads
மாவட்ட எல்லைகள்
சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மேற்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்தாடா மாவட்டம் மற்றும் தும்கா மாவட்டங்கள், மற்ற திசைகளில் மேற்கு வங்காளத்தின் வர்தமான் மாவட்டம் மற்றும் முர்சிதாபாத் மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளது.
மண் வளம்
இம்மாவட்டத்தை செம்மண் நிலம் என்று அழைப்பர்.[4] இம்மாவட்டத்தின் மேற்கு பகுதி மண் வளம் குறைந்த சோட்டா நாகபுரி பீடபூமியில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் கிழக்குப் பகுதி வளமிக்க மண் வளம் கொண்டது.[5]
பொருளாதாரம்
இம்மாவட்டத்தின் 75 விழுக்காடு மக்கள்தொகையினர் வேளாண் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.[6] பருத்தி மற்றும் அரிசி வேளாண்மை, எண்ணெய் வித்து அரைவை ஆலைகள், பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் நெய்தல், கல் குவாரிகள், உலோகப் பாத்திரங்கள் தயாரித்தல் இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்கள்.
பாக்ரேஷ்வர் அனல் மின் நிலையம் இம்மாவட்டத்தின் ஒரே கனரக தொழில் நிறுவனம் ஆகும்.
கால நிலை
கோடைகாலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சென்றுவிடும். குளிர்காலத்தில் வெப்பநிலை பத்து டிகிரி செல்சியஸ்க்கு கீழ் சென்றுவிடும். மாவட்டத்தின் மழைக்காலம் சூன் முதல் அக்டோபர் வரையாகும். சராசரி மழை அளவு 1405 மில்லி மீட்டராகும்.
ஆறுகள்
சோட்டாபுரி பீடபூமியில் உற்பத்தியாகி, இம்மாவட்டத்தின் கிழக்கு மேற்காக பாயும் பல ஆறுகளில் முக்கியமானவைகள், அஜய் ஆறு, மயுராக்சி ஆறு, (மோர் ஆறு), கொபை ஆறு, பாக்ரேஷ்வர் ஆறு, பிராமணி ஆறு. துவாரகா ஆறு, ஹிங்லோ ஆறு, சாப்லா ஆறு, பன்ச்லொய் ஆறு மற்றும் பக்லா ஆறு முதலியனவாகும். சியுரி நகரத்திற்கு அருகே உள்ள மயுராக்சி நீர்த்தேக்கம், இம்மாவட்டத்தின் 2428 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்திற்கு நீர் பாசன வசதி அளிக்கிறது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
4,545 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் நிர்வாக வசதிக்காக சியுரி சதர் , போல்பூர் , இராம்பூர்ஹட் என மூன்று உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[1] சியுரி நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம். இம்மாவட்டத்தில் பதினேழு காவல் நிலையங்களும், பதினொன்பது வட்டார வளர்ச்சி அலுவலகங்களும், ஆறு நகராட்சி மன்றங்களும், நூற்றி அறுபத்தி ஏழு ஊராட்சி மன்றங்களும் கொண்டுள்ளது.[7]
அரசியல்
சட்டமன்ற தொகுதிகள்
பிர்பூம் மாவட்டத்தில் 1 துப்ராஜ்பூர் (பட்டியல் சமூகம்), 2 சியுரி, 3 சைந்தியா (பட்டியல் சமூகம்), 4 ராம்பூர்ஹட், 5 ஹன்சன், 6 நல்ஹாட்டி, 7 முராரை, 8 போல்பூர், 9 நானூர், (பட்டியல் சமூகம்) மற்றும் 10 லப்பூர் மற்றும் 11 மயிரேஷ்வர் என பதினொன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.
மக்களவைத் தொகுதிகள்
இம்மாவட்டத்தில் பிர்பூம் மற்றும் போல்பூர் என இரண்டு இந்திய மக்களவைத் தொகுதிகளை கொண்டுள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,502,404 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,790,920 மற்றும் பெண்கள் 1,711,484 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 771 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.68 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.92 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.14 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 448,485 ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 62.29%, முஸ்லீம்கள் 37.06%, கிறித்தவர்கள் 0.31% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[8]
Remove ads
போக்குவரத்து வசதிகள்

சியுரி தொடருந்து நிலையம் ஆசான்சோல், ராணிகஞ்ச், துர்க்காபூர் மற்றும் கொல்கத்தா நகரங்களுடன் இணைக்கிறது.[9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads