பிற்கால குப்தர் வம்சம்

From Wikipedia, the free encyclopedia

பிற்கால குப்தர் வம்சம்
Remove ads

பிற்கால குப்த வம்சம் (Later Gupta dynasty) பண்டைய இந்தியாவின் கிழக்கில் உள்ள மகத நாட்டை குப்தப் பேரரசுக்கு பின்னர் கிபி 490 முதல் 750 முடிய ஆண்டனர். பிற்கால குப்த வம்சத்தினர் தங்களை பாரம்பரிய குப்த வம்சத்தின் வழிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டனர்.[3]

விரைவான உண்மைகள் தலைநகரம், சமயம் ...
Remove ads

வரலாறு

குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பிற்கால குப்தர்கள் மகத நாட்டை ஆட்சி செய்தனர்.[4] பிற்கால குப்த வம்சத்தை நிறுவிய மன்னர் கிருஷ்ண குப்தரின் மகளை மௌகரி வம்ச இளவரசன் ஆதித்திய சேனனை மணந்தார். ஆதித்திய சேனனின் அப்சத் கல்வெட்டின் படி, கிருஷ்ண குப்தரின் பேரன் ஜீவித குப்தர் இமயமலை நாடுகள் மற்றும் வங்காளத்தின் தெற்கு பகுதிகள் மீது படையெடுத்தான் எனக்கூறுகிறது.[5]

ஜீவிதகுப்தரின் மகனான குமார குப்தரின் ஆட்சியின் போது மௌகரி வம்ச மன்னர் ஈசானவர்மனை 554ல் போரில் வென்றார். மௌகரிகள் குமார குப்தரின் மகன் தாமோதர குப்தரை வென்றனர். [5] தாமோதர குப்தரின் மகன் மகாசேனா குப்தர் புஷ்யபூதி வம்சத்தவர்களுடன் கூட்டணி அமைத்தார். மேலும் மகாசேனா குப்தரின் சகோதரியை தானேசர் மன்னர் ஆதித்தியவர்தனுக்கு மணமுடித்தார். மகாசேனா குப்தர் காமரூபம் மீது படையெடுத்து மன்னர் சுஸ்வதிதா வர்மனை வென்றார்.[5] அதே நேரத்தில் மகத நாட்டின் மீது மௌகரி வம்ச மன்னர் சர்வவர்மன், காமரூப மன்னர் சுப்ரதிஷ்டா வர்மன் மற்றும் திபெத்திய மன்னர் சோங்சென் காம்போ படையெடுத்தனர். போரில் மௌகாரி மன்னன் சர்வ வர்மன், 575ல் தாமோதர குப்தனை தோற்கடித்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் சர்வ வர்மன் தற்கால உத்தரப் பிரதேசம் முழுமைக்கும் ஆட்சியாளரானார்.[6][7] இச்சூழ்நிலையில் மகாசேன குப்தர் மகதத்தை விட்டு மால்வாவிற்கு தப்பிச் சென்றார். அதே நேரத்தில் புஷ்யபூதி வம்ச பேரரசர் ஹர்ஷவர்தனர் (ஆட்சிக் காலம் 606–647) மகத நாட்டில் பிற்கால குப்தர்களின் ஆட்சியை நிலைநிறுத்தி, தனது பேரரசின் சிற்றரசர்களில் ஒருவரான நியமித்தார்.[4]

ஹர்சவர்தனரின் இறப்பிற்குப் பின் பிற்கால குப்த வம்சத்து மன்னர் ஆதித்திய சேனன் மகத நாட்டை, வடக்கில் கங்கை ஆறு முதல் தெற்கே சோட்டா நாக்பூர் மேட்டுநிலம், மேற்கில் கோமதி ஆறு, கிழக்கில் வங்காள விரிகுடா வரை விரிவாக்கம் செய்தார்.[8] இறுதியாக பிற்கால குப்த வம்ச மன்னர் ஆதித்திய சேனன் சாளுக்கியர்களால் தோற்கடிப்பட்டார்.[9]

பிற்கால குப்த வம்சத்தின் இறுதி மன்னராக இரண்டாம் ஜீவித குப்தரை, 750ல் கன்னோசி நாட்டின் வர்மன் வம்ச மன்னர் யசோவர்மன் வென்று, பிற்கால குப்த வம்சத்தை முடிவு கட்டினார்.[8]

Remove ads

ஆட்சியாளர்கள்

அறியப்பட்ட பிற்கால குப்த வம்ச ஆட்சியாளர்கள் பட்டியல்:[10][11][12]

Thumb
மன்னர் ஆதித்திய சேனன் (ஆட்சிக் காலம் 655-680), பிற்கால குப்த வம்ச மன்னர்களின் பெயர்களை குப்தர் எழுத்துமுறையில் பொறித்த கல்வெட்டு[13]
  • கிருஷ்ண குப்தர் - கிபி 490-505
  • அர்ச குப்தர் - 505-525
  • ஜீவித குப்தர்- 525-550
  • குமார குப்தர் - 550-560
  • தாமோதர குப்தன் - 560-562
  • மகாசேனா குப்தர் - 562-601
  • மாதவ குப்தர் - 601-655
  • ஆதித்திய சேனன் - 655-680
  • இரண்டாம் ஜீவித குப்தர
Remove ads

ஜெயபுர குப்தர்கள்

தற்கால பிகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டப் பகுதிகளைக் கொண்ட ஜெயபுரம் எனும் பகுதியை கிபி 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மன்னர்கள் தங்களை பிற்கால குப்த வம்சத்தவர்கள் எனக்கூறிக்கொண்டனர். [14] இதன் ஆட்சியாளர்கள் குறித்த செப்புப் பட்டயம் 1919ல் கண்டுபிடிக்கப்பட்டது.[15]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads