புஞ்சாக் ஆலாம்
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் ஒரு நகரியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புஞ்சாக் ஆலாம், (மலாய்; ஆங்கிலம்: Puncak Alam; சீனம்: 本查阿南); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு நகரியம் ஆகும். இது சா ஆலாம் மாநகரில் இருந்து ஏறக்குறைய 20 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ளது.[1] துரிதமாக நகரமயமாக்கப்பட்டு வரும் இந்த நகரியத்தில், பல குடியிருப்பு பகுதிகள்; மற்றும் வணிகத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பசுமையான பகுதிகள், பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் மிதிவண்டி ஓட்டும் பாதைகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளுக்கான இடங்களைக் கொண்டுள்ள இந்த நகர்ப்பகுதி, கோலாலம்பூர், சா ஆலாம் மற்றும் கிள்ளான் போன்ற முக்கிய நகரங்களுடன் சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதிகளைப் பெற்றுள்ளது.[3]
Remove ads
அமைவு
பெட்டாலிங் ஜெயா மற்றும் சா ஆலாம் மாநகரங்களை எல்லைகளாகக் கொண்ட இந்த நகரியத்தின். தற்போதைய மக்கள் தொகை ஏறக்குறைய 50,000 ஆகும்.[3] இந்த நகரியம் கோலாலம்பூர் (30 கி.மீ), பெட்டாலிங் ஜெயா (25 கி.மீ), சா ஆலாம் (20 கி.மீ) மற்றும் கிள்ளான் (15 கி.மீ) போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே ஒரு வளர்ச்சி முனையமாகச் செயல்படுகிறது.[4][5]
வரலாறு
முன்பு இந்தப் பகுதி புக்கிட் செராக்கா என்று அழைக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் புக்கிட் செராக்கா எனும் பெயரில் ஒரு வன காப்பகம் இருந்தது.[6] இங்கு நிறைய ரப்பர் தோட்டங்களும்; செம்பனைத் தோட்டங்களும் இருந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்தனர். அந்தத் தோட்டங்களில் புக்கிட் செராக்கா தோட்டமும் ஒன்றாகும்.
1997-ஆம் ஆண்டில் புஞ்சாக் ஆலாம் ஒரு செழிப்பான நகரமாக மாற்றம் அடையத் தொடங்கியது. 14,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதி, தொடக்கத்தில் அதன் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. அத்துடன்
டாமன்சாரா–சா ஆலாம் உயர்த்தப்பட்ட விரைவுச் சாலை (Damansara–Shah Alam Elevated Expressway)[7] மற்றும்
மேற்கு கடற்கரை விரைவுச்சாலை[8] போன்ற விரைவுச்சாலைகளின் கட்டுமானங்கள்; கடந்த பத்தாண்டுகளில் விரைவான நகரமயமாக்கலுக்கு வழிவகுத்தன. இந்த நகரம் தற்போது நவீன குடியிருப்பு, தொழில்துறை மற்றும் வணிக மண்டலங்களைக் கொண்டுள்ளது.
Remove ads
கல்வி
இந்த நகரத்தில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) (Universiti Teknologi MARA) புஞ்சாக் ஆலாம் வளாகம் உள்ளது. 4.39 கிமீ² பரப்பளவைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம் 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 40,000 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். மேலும், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மலேசியா முழுவதும் மேலும் 34 வளாகங்கள் உள்ளன.[4] இதன் அருகில், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மருத்துவமனையும் (UiTM University Hospital) உள்ளது.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

