புத்தகயை

From Wikipedia, the free encyclopedia

புத்தகயைmap
Remove ads

புத்தகயை (புத்த கயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்கயா (ஹிந்தி: बोधगया)), இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பிக்குகள் தங்கும் பெரிய விகாரம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். மற்றவைகள் குசிநகர், லும்பினி, சாரநாத், கபிலவஸ்து, புத்த கயா, சாரநாத் மற்றும் சாஞ்சி ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது..

விரைவான உண்மைகள்

பெளத்த சமயத்தை பின்பற்றும், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளின் சார்பாக புத்தர் கோயில்கள் இங்கு கட்டப்பட்டுள்ளது.

Remove ads

மகாபோதி கோயில் குண்டுவெடிப்புகள்

Thumb
போதி மரத்தை சுற்றிலும் போதி கயையில் அசோகரால் கட்டப்பட்ட கோயில் குறித்த சாதவாகனர் காலத்தைச் சேர்ந்த சிற்பம். ஆண்டு பொ. ஊ. 1ஆம் நூற்றாண்டு, இடம் சாஞ்சி.

7 சூலை 2013 அன்று 05:15 மணி வாக்கில் 2,500 ஆண்டுகள் பழமையான மகாபோதி கோயில் வளாகத்தில் ஒரு சிறிய தாக்கமுடைய குண்டு வெடிப்பானது நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஒன்பது தாக்கம் குறைந்த வெடிப்புகள் நடைபெற்றன. இதில் இரண்டு புத்த துறவிகள் காயமடைந்தனர். இதில் ஒருவர் திபெத்தையும், மற்றொருவர் பர்மாவையும் சேர்ந்தவரும் ஆவர். இந்த குண்டு வெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான இந்தியன் முஜாகிதீன் நடத்தியது.[3][4] 80 அடி உயர புத்தர் சிலைக்கு கீழ் இருந்த ஒன்று மற்றும் கருமபா கோயிலுக்கு அருகில் இருந்த மற்றொன்று ஆகிய இரண்டு பிற வெடி குண்டுகள் காவல்துறையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டன.[5][6]

1 சூன் 2018 அன்று தேசிய புலனாய்வு முகமையின் ஒரு சிறப்பு நீதிமன்றமானது பட்னாவில் இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஐந்து நபர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.[7]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads