பகாருயோங் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பகாருயோங் அல்லது மலையபுரம் ஆங்கிலம்: Pagaruyung; Malayapura; Malayupura) [1] மினாங்கபாவு: Karajaan Pagaruyuang; Pagaruyung Dārul Qarār) என்பது 18-ஆம் நூற்றாண்டில் சுமாத்திரா தீவில் இருந்த ஒரு பேரரசு ஆகும். மேற்கு சுமாத்திராவின் மினாங்கபாவு மன்னர்களின் வசிப்பிடமாகவும்; ஓர் இராச்சியமாகவும் இருந்தது. முந்தைய மலையபுரம் அரசு, தற்போது இந்தோனேசியாவில் பகாருயோங் என்று அழைக்கப்படுகிறது.
தற்போதைய காலத்தில் பகாருயோங் என்பது இந்தோனேசியா, பத்துசங்கார், தானா டாத்தார் பிராந்தியத்தின் தஞ்சோங் இமாஸ் மாவட்டத்தில் ஒரு கிராமமாக உள்ளது.[2]
பகாருயோங் இராச்சியம் நிறுவப்படுவதற்கு முன்பு, பகாருயோங் இராச்சியம், மலையபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமோகபாசா கல்வெட்டு (Amoghapasa inscription) பதிவுகளின்படி சுவர்ணபூமி என்று முன்பு அழைக்கப்பட்ட சுமாத்திரா நிலப்பகுதியில் பகாருயோங் இராச்சியத்தை ஆதித்தியவர்மன் என்பவர் தோற்றுவித்ததாக அறியப்படுகிறது.
Remove ads
வரலாறு
வரலாற்று இணைப்புகள்
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (1663–1781)
பிரித்தானியப் பேரரசு (1781–1784)
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (1784–1795)
பிரித்தானியப் பேரரசு(1795–1819)
இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் (1819–1942)
சப்பானியர் ஆக்கிரமிப்பு (1942–1945)
இந்தோனேசிய குடியரசு (1945–தற்போது)
14-ஆம் நூற்றாண்டில், ஆதித்தியவர்மன் எனும் சாவக அரசர், ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். அதன் பின்னணியில் ஜாவா தீவின் மேற்குப் பகுதியில் மினாங்கபாவு பேரரசை தோற்றுவித்தார்.[3][4] மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவு பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆதித்யவர்மன், 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் மினாங்கபாவு பேரரசை ஆட்சி செய்தார்.
மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் ஆதித்தியவர்மன். இந்த மலையபுரம் (Malayapura), தற்போது பகாருயோங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.[5][6]
ஆதித்தியவர்மன்
1309-இல் இருந்து 1328 வரை, மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த ஜெயநகாரா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆதித்தியவர்மன். இவர் திரிபுவன இராஜா எனும் பேரரசரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக ஆதித்தியவர்மன் இருந்த போதுதான் மினாங்கபாவு பேரரசைத் தோற்றுவித்தார்.[7]
ஆதித்தியவர்மன் மறைந்த பிறகு, மினாங்கபாவு பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். இராஜா ஆலாம், இராஜா ஆடாட், இராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக இராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள்.[8][9]
Remove ads
காட்சியகம்
- ஆதித்தியவர்மன்
- ஆதித்தியவர்மன் கல்வெட்டு
- பகாருயோங் அரண்மனை மாளிகை
- மினாங்கபாவ் இல்லம்
- ஆதித்யவர்மன் அருங்காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads